வீவோ குழுமம் தனது வீவோ நெகஸ் போன் வரிசைகளில் மேலும் புதிதாக ஒரு ஸ்மார்ட் போனை விற்பனைக்கு தயாராக்கியுள்ளது. அந்நிறுவனத்தின் பிரீமியம் வகையை சேர்ந்த இந்த வகை ஸ்மார்ட்போன்கள் ₹ 44,990 விற்கப்பட உள்ளன. இரண்டு ஸ்கீரின்கள் ஆமோல்லெட் பேனல்கள், மூன்று பின்புற கேமராக்களுடன் வெளிவரும் முதல் தயாரிப்பாகும். வீடியோ காட்சிகள் மற்றும் படத்தொகுப்புகளை துல்லியமாக படம்பிடிக்க உதவுகிறது.
மேலும் ஸ்னாப்டிராகன் 845 SoC செயல்பாட்டை கொண்ட அந்த மொபைல் போன் 10 ஜிபி ரேம், மற்றும் 22.5W வரைக்கும் வேகமாக சார்ஜ் ஏற்றுதல் போன்ற அம்சங்களை கொண்டது.
வீவோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பக்கத்தில் வெளியான தகவல்கள் படி இந்த ரக தனித்துவமான போன் 10 ஜிபி ரேமும் + 128GB நினைவகத்தை கொண்டது. சுமார் ரூ .52,300க்கு விலையில் விவோ நேகஸ் போன்கள் ‘இஐஸ் பியில்டு புளூ' மற்றும் ‘ஸ்டார் ஊதா' வண்ணங்களில் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளது.
9.0 பை மற்றும் ஃபன் டச் ஓ.எஸ் (Funtouch OS) 4.5 வகை அண்ட்ராய்டில் இயங்கும், இரண்டு காட்சி பேனல்கள் கொண்ட இந்த வகை ஸ்மார்ட் போன் 6.39 (1080x2340 பிக்சல்கள்) மற்றும் 19.5: 9 (1080x1920 பிக்சல்கள்) அங்குலங்களில் கிடைக்கும். மேலும் ஆக்டா-கோர், குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 845 SoC மூலம் இயக்கப்படுகிறது, மேலும் 10GB RAM மற்றும் 128GB உள் சேமிப்பு வசதி உள்ளது.
கேமரா அமைப்பு பொருத்தவரை 2 மெகாபிக்சல் கேமராவும், இரண்டாம்நிலையில் இரவு பார்வை சென்சார் (f / 1.8 துளை) மற்றும் ஒரு மூன்றாவது TOF 3D ஸ்டீரியோ கேமரா சென்சார் கொண்ட 12 மெகாபிக்சல் கொண்டுள்ளது. முன் கேமரா சென்சார்கள் இல்லாததனால் தொலைப்பேசியைத்திறக்க, ஒரு கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. 22.5W வேக சார்ஜ் ஆதரவுடன் ஹூட்டின் கீழ் 3,500 mAh பேட்டரி உள்ளது.
மேலும் இணைப்பு விருப்பங்களாக 4G LTE, ப்ளூடூத், ஜிபிஎஸ், வைய் பை ஆகிய அமைப்புகளுடன் 199.2 கிராம் எடை கொண்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்