மூன்று கேமராக்களை கொண்டுள்ள வீவோவின் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம்!

ஸ்னாப்டிராகன் 845 SoC செயல்பாட்டை கொண்ட அந்த மொபைல் போன் 10 ஜிபி ரேம், மற்றும் 22.5W வரைக்கும் வேகமாக சார்ஜ் ஏற்றுதல் போன்ற அம்சங்களை கொண்டது.

மூன்று கேமராக்களை கொண்டுள்ள வீவோவின் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம்!

Vivo Nex Dual Display Edition price has been set at CNY 4,998 in China

விளம்பரம்

வீவோ குழுமம் தனது வீவோ நெகஸ் போன் வரிசைகளில் மேலும் புதிதாக ஒரு ஸ்மார்ட் போனை விற்பனைக்கு தயாராக்கியுள்ளது. அந்நிறுவனத்தின்  பிரீமியம் வகையை சேர்ந்த இந்த வகை ஸ்மார்ட்போன்கள் ₹ 44,990 விற்கப்பட உள்ளன. இரண்டு ஸ்கீரின்கள் ஆமோல்லெட் பேனல்கள், மூன்று பின்புற கேமராக்களுடன் வெளிவரும் முதல் தயாரிப்பாகும். வீடியோ காட்சிகள் மற்றும் படத்தொகுப்புகளை துல்லியமாக படம்பிடிக்க உதவுகிறது.

மேலும் ஸ்னாப்டிராகன் 845 SoC செயல்பாட்டை கொண்ட அந்த மொபைல் போன் 10 ஜிபி ரேம், மற்றும் 22.5W வரைக்கும் வேகமாக சார்ஜ் ஏற்றுதல் போன்ற அம்சங்களை கொண்டது.


வீவோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பக்கத்தில் வெளியான தகவல்கள் படி இந்த ரக தனித்துவமான போன் 10 ஜிபி ரேமும் + 128GB நினைவகத்தை கொண்டது. சுமார் ரூ .52,300க்கு  விலையில் விவோ நேகஸ் போன்கள் ‘இஐஸ் பியில்டு புளூ' மற்றும் ‘ஸ்டார் ஊதா' வண்ணங்களில் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளது. 


9.0 பை மற்றும் ஃபன் டச் ஓ.எஸ் (Funtouch OS) 4.5 வகை அண்ட்ராய்டில் இயங்கும், இரண்டு காட்சி பேனல்கள் கொண்ட இந்த வகை ஸ்மார்ட் போன் 6.39  (1080x2340 பிக்சல்கள்) மற்றும் 19.5: 9 (1080x1920 பிக்சல்கள்) அங்குலங்களில் கிடைக்கும்.  மேலும் ஆக்டா-கோர், குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 845 SoC மூலம் இயக்கப்படுகிறது, மேலும் 10GB RAM மற்றும் 128GB உள் சேமிப்பு வசதி உள்ளது.


கேமரா அமைப்பு பொருத்தவரை 2 மெகாபிக்சல் கேமராவும், இரண்டாம்நிலையில் இரவு பார்வை சென்சார் (f / 1.8 துளை) மற்றும் ஒரு மூன்றாவது TOF 3D ஸ்டீரியோ கேமரா சென்சார் கொண்ட 12 மெகாபிக்சல் கொண்டுள்ளது. முன் கேமரா சென்சார்கள் இல்லாததனால் தொலைப்பேசியைத்திறக்க, ஒரு கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. 22.5W வேக சார்ஜ் ஆதரவுடன் ஹூட்டின் கீழ் 3,500 mAh பேட்டரி உள்ளது.


மேலும் இணைப்பு விருப்பங்களாக 4G LTE, ப்ளூடூத், ஜிபிஎஸ், வைய் பை ஆகிய அமைப்புகளுடன் 199.2 கிராம் எடை கொண்டது.

  • KEY SPECS
  • NEWS
Display 6.39-inch
Processor Qualcomm Snapdragon 845
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 10GB
Storage 128GB
Battery Capacity 3500mAh
OS Android 9.0 Pie
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »