விவோ நிறுவனமானது கடந்த மாதம் விவோ நெக்ஸ் டூயல் டிஸ்பிளே ஸ்மார்டபோனை அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, தற்போது புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்த விவோ திட்டமிட்டுள்ளது. இந்த புது வெர்ஷனில் 8ஜிபி ரேம் கொண்டுள்ளதாக சீனாவின் டீனா வளைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், டீனாவில் இந்த போனின் புகைப்படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இது அதன் 10ஜிபி வேரியண்ட்டை போல் இருக்கும் என கருதப்படுகிறுது. விவோ நெக்ஸ் டூயல் டிஸ்பிளே மாடலானது சீனாவில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய 8ஜிபி வேரியண்ட்டில் 3,425mAh பேட்டரி, மற்றும் 5.49 இன்ச் டிஸ்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு பையில் இந்த போன் இயங்குகிறிது.
விவோ நெக்ஸ் டூயல் டிஸ்பிளே மாடலானது, V1820A மற்றும் V1820T உள்ளிட்ட எண்கள் மூலம் தெரிய வந்தது. இந்த 2 மாடல்களும் டூயல் டிஸ்பிளேயுடன் வருகிறது. மேலும், டீனா வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, விவோ நெக்ஸ் 8 ஜிபி வேரியண்டில் ஆண்ட்ராய்டு பை, ஒரு பக்கம் 5.49 இன்ச் (1080x1920 பிக்ஸல்ஸ்) ஓஎல்இடி டிஸ்பிளே மறுபக்கம் 6.39 இன்ச் (1080x2340 பிக்ஸல்ஸ்) அமோல்ட் டிஸ்பிளேயும் கொண்டுள்ளது. இதில், 2.2Ghz ஆக்டா கோர் பிராசஸருடன் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி நினைவகம் கொண்டுள்ளது.
இந்த தகவலில், விவோ நெக்ஸ் டூயல் டிஸ்பிளே 10ஜிபி ரேம் வகையில் 3 கேமரா இருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் சரியான கேமரா சென்சார் குறித்த விவரங்கள் தெரியவில்லை. இதில் டிஸ்பிளே கைரேகை சென்சார், 3,425mAh பேட்டரி இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த போனின் அளவானது, 157.19x75.3x8.09mm ஆகும். இதன் இடையானது 200.19 கிராம் ஆகும். இது கோல்டு நிறத்தில் கிடைக்கும் என தெரிகிறது. மற்ற நிறங்கள் குறித்த விவரம் வெளிவரும்போது தெரியும்.
10ஜிபி வெர்ஷனில், வேறு பிராஸசர், அளவு கம்மியான பேட்டரி பயன்படுத்தப்படும் என தெரிகிறது. இதில் கேமரா சென்சார் வகையும் மாறலாம் என தெரிகிறது. இந்த விவோ நெக்ஸ் டூயல் டிஸ்பிளே 10ஜிபி வகையானது, 12 மெகா பிக்ஸெல்ஸ் பிரைமரி சென்சார் (f/1.79 அப்பர்சர்), 2 மெகா பிக்ஸெல்ஸ் சகண்டரி இரவு நேர விஷன் உள்ள சென்சார் (f/1.8 அப்பர்சர்), 3ஆவது 3டி ஸ்டிரியோ கேமரா சென்சார் இருக்கும் என தெரிகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்