Vivo நிறுவனம் தனது OriginOS 6 சாப்ட்வேர் அப்டேட் இந்தியாவில் எந்தெந்த போன்களுக்கு, எப்போது கிடைக்கும் என்ற முழுமையான கால அட்டவணையை அறிவித்துள்ளது
Photo Credit: Vivo
ஆரிஜின் OS 6 ஸ்கின், ஆண்ட்ராய்டு 16-ன் மேல் கட்டமைக்கப்பட்டுள்ளது.
நம்ம மொபைல் பிராண்ட் லிஸ்ட்ல ரொம்ப முக்கியமான இடத்துல இருக்குற Vivo, இப்போ ஒரு தரமான அப்டேட் செய்தியை சொல்லியிருக்காங்க. Vivo அவங்களோட லேட்டஸ்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமான OriginOS 6 அப்டேட்டோட முழு வெளியீட்டுத் தேதி அட்டவணையையும் (Rollout Schedule) இந்தியாவுக்காக இப்போ கன்ஃபார்ம் பண்ணியிருக்காங்க. சைனாவுல ஏற்கனவே அக்டோபர் 10 ஆம் தேதி இந்த அப்டேட் ரிலீஸ் ஆகிடுச்சு. ஆனா, இந்தியால நம்ம பயன்படுத்திக்கிட்டு இருக்குற Funtouch OS 15க்கு பதிலா, இந்த OriginOS 6 தான் வரப்போகுது.
இந்த OriginOS 6 அப்டேட் வெறும் புது நம்பர் கிடையாது. இது Android 16 அடிப்படையில உருவாக்கப்பட்டுள்ளது. இதுல Origin Smooth Engineன்னு ஒரு வசதி இருக்கு. இந்த இன்ஜின் போனோட வேகத்தையும், ஸ்மூத்னஸையும் (Fluidity) பல மடங்கு அதிகப்படுத்தும்னு Vivo சொல்லியிருக்காங்க. அதுமட்டுமில்லாம, Ultra-core Computing மற்றும் Memory Fusion டெக்னாலஜியையும் இது சப்போர்ட் பண்ணுது.
OriginOS 6-க்கு மாறும்போது, ஆப்ஸ் ஓப்பனிங், டேட்டா லோடிங் வேகம் இதெல்லாமே பழைய வெர்ஷனை விட 106% வேகமா இருக்குமாம்! அதாவது, ஒரு ஆல்பத்துல 5000 போட்டோ இருந்தாலும், அத சில செகண்ட்ல ஓப்பன் பண்ண முடியுமாம். இதெல்லாம் கேட்டாலே செம எக்சைட்மென்ட்டா இருக்குல்ல?
புது Vivo Sans Font கூட 40க்கும் மேற்பட்ட மொழிகளுக்கு சப்போர்ட் பண்ணுது. அதுவும் இல்லாம, Origin Islandன்னு ஒரு செம கூலான அம்சம் இதுல இருக்கு. இது நமக்குத் தேவையான ஸ்மார்ட் சஜஷன்களை உடனுக்குடன் காட்டும். மியூசிக் கன்ட்ரோல், மீட்டிங் Join பண்ற பட்டன், காப்பி பண்ண நம்பருக்கு கால் பண்ற ஷார்ட்கட்னு எல்லாமே இதுல பாத்துக்கலாம்.
Vivo இந்த அப்டேட்ட ஒரு கட்டம் கட்டமா (Phase by Phase) ரிலீஸ் பண்ண போறாங்க. இது 2026 ஆம் வருஷத்தோட முதல் பாதி வரைக்கும் நீடிக்கும்.
Vivo X200 Series
Vivo X Fold 5
Vivo V60
Vivo X100 Series
Vivo X Fold 3 Pro
Vivo V60e, Vivo V50, Vivo V50e
Vivo T4 Ultra, Vivo T4 Pro, Vivo T4R 5G
Vivo X90 Series, Vivo V40 Series, Vivo V30 Series, Vivo T3 Series
Vivo T4 5G, Vivo T4x 5G
Vivo Y400 Series, Vivo Y300 5G, Vivo Y200 Series, Vivo Y100, Vivo Y100A, Vivo Y58 5G, Vivo Y39 5G
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்