Photo Credit: Weibo
2018 ஆம் நடந்த உலக மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் முதன் முறையாக Vivo Apex அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் அதிகாரபூர்வ அறிமுகம் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்டது. இந்த மொபைல் போனின் மிக முக்கியமாக பார்க்கப்படுவது 91 சதவிகிதம் ஸ்க்ரீன் - பாடி ரேஷியோ அம்சம், பாதி ஸ்கிரீனிலேயே விரலை ஸ்கெனிங் செய்யும் தொழில்நுட்பம் மற்றும் திடுக்கென்று போனில் இருந்து துள்ளி குதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ள செல்ஃபி கேமரா ஆகியவையே. தற்போது இந்த போன் குறித்து ஒரு புதிய தகவல் வந்துள்ளது. அதாவது, இந்த போனின் பெயரை Vivo Apex என்பதிலிருந்து Vivo Nex என்று மாற்றி வெளியிடப் போகிறார்களாம். வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி இந்த போன் சீனாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு வகைகளில் இந்த போன் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. துள்ளி குதிக்கும் பாப்-அப் கேமரா உடன் ஒரு மாடலும், அது இல்லாமல் இன்னொரு மாடலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்படும் எனப்படுகிறது.
சீனாவில் இருக்கும் ஒரு கடையின் முன் புறத்தில், Vivo Apex போன்ற ஒரு போனின் விளம்பரம் போட்டு அதற்கு Vivo Nex என்று பெயரிடப்பட்டு இருந்தது. இந்த விளம்பரம் தான் Vivo Apex என்கின்ற பெயரை Vivo நிறுவனம் மாற்றியுள்ளது என்பதற்கு சாட்சியமாக இருக்கிறது.
சீனாவில் இருந்து வரும் தகவல்கள், இரண்டு வகைகளில் இந்த போன் ரிலீஸ் ஆகும் என்றே சொல்கின்றன. துள்ளி குதிக்கும் பாப்-அப் கேமராவுடன் வரும் டாப் வேரியன்ட் ஒரு வகை. இது 845 ஸ்னாப்டிராகன் ப்ராசஸர், 8ஜிபி ரேம், 256 உள் மெமரி போன்ற தொழில்நுட்ப விஷயங்கள் இருக்கும். இந்த வகை போனின் விலை 52,600 ரூபாயாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த வேரியன்ட்டில் வரும் பாப்-அப் கேமரா, 8 மெகா பிக்சல் க்ளாரிட்டி கொண்டதாக இருக்கும் எனத் தெரிகிறது. கேமரா எடுப்பதற்கான ஆப்ஷனை அழுத்தியவுடன் 0.8 வினாடிகளில் செல்ஃபி கேமரா திடுக்கென வெளியே வரும்.
பாப்-அப் கேமரா இல்லாத இன்னொரு வகை போன், 660 ஸ்னாப்டிராகன், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்புத் திறன் கொண்டதாக இருக்கும். பாப்-அப் கேமராவுக்கு பதில் சாதரணமாக அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் வரும் வகையில் செல்ஃபி கேமரா இந்த மொபைலில் இருக்கும். இதன் விலை 40,000 ரூபாய் இருக்கலாம் எனப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்