Budget 2020: நிதியமைச்சர் புதிய மின்னணு உற்பத்தி திட்டத்தை முன்மொழிந்தார்...!

Budget 2020: நிதியமைச்சர் புதிய மின்னணு உற்பத்தி திட்டத்தை முன்மொழிந்தார்...!

இந்த திட்டத்தின் விவரங்கள் பிற்காலத்தில் அறிவிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார்

ஹைலைட்ஸ்
  • ஒவ்வொரு மாவட்டத்தையும் ஏற்றுமதி மையமாக மாற்றுவதே அரசின் நோக்கமாகும்
  • உள்நாட்டு உற்பத்தி & முதலீட்டை ஈர்ப்பைதே இந்தியாவை உயர்த்தும்: நிர்மலா
  • மாநில அளவில் கூட அனுமதிகளை எளிதாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்
விளம்பரம்

செல்போன்கள், குறைக்கடத்திகள் (semi-conductors) மற்றும் பிற மின்னணு சாதனங்களை தயாரிக்கும் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை (இன்று) முன்மொழிந்தார். தனது இரண்டாவது பட்ஜெட் விளக்கக்காட்சியில், நிதியமைச்சர், இந்தியா உள்நாட்டு உற்பத்தியை உயர்த்த வேண்டும் மற்றும் மின்னணு உற்பத்தியில் முதலீட்டை ஈர்க்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்தையும் ஏற்றுமதி மையமாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று சீதாராமன் கூறினார்.

"எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, மொபைல் போன் உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ் கூறுகள் மற்றும் குறைக்கடத்தி அலகுகள் (semiconductor units) ஆகியவற்றிற்கான புதிய திட்டத்தை அறிவிக்க விரும்புகிறேன். பொருத்தமான மாற்றங்களுடன், இந்த திட்டத்தை மருத்துவ சாதனங்களின் உற்பத்திக்கும் பயன்படுத்தலாம்" என்று சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறினார்.

திட்டத்தின் விவரங்கள் பிற்காலத்தில் அறிவிக்கப்படும்.

மாநில அளவில் கூட அனுமதிகளை எளிதாக்குவதையும், முதலீட்டாளர்களுக்கு இலவச முதலீட்டு ஆலோசனையை வழங்க முதலீட்டு அனுமதி கலத்தை அமைப்பதையும், அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான பிற அறிவிப்புகளில், நாடு முழுவதும் டேட்டாசென்டர் பூங்காக்களை (datacentre parks) உருவாக்க தனியார் துறைக்கு உதவும் வகையில் ஒரு கொள்கையை கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று நிதி அமைச்சர் தெரிவித்தார். அவர் குவாண்டம் தொழில்நுட்பம் (Quantum Technology) மற்றும் பயன்பாடு தொடர்பான தேசிய திட்டத்திற்காக 5 ஆண்டுகளில் 8,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, அரசு, நிதியாண்டு 21-ல் பாரத்நெட்டுக்கு 6,000 கோடி ரூபாய் வழங்கும். பாரத்நெட் மூலம் ஃபைபர்-டு-ஹோம், இந்த ஆண்டு 1 லட்சம் கிராம் பஞ்சாயத்துகளை இணைக்கும் என்று அவர் கூறினார்.

2020-21-க்கான பட்ஜெட்டை முன்வைத்த சீதாராமன், கிராம பஞ்சாயத்து மட்டங்களில் உள்ள காவல் நிலையங்கள், தபால் நிலையங்கள் போன்ற அனைத்து பொது நிறுவனங்களும் டிஜிட்டல் முறையில் இணைக்கப்படும் என்றார்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Union Budget 2020, Budget 2020, Nirmala Sitharaman
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »