Nothing-ன் அடுத்த அதிரடியான மாடலான Nothing Phone 3 பத்தி சூடான தகவல்கள் கசிய ஆரம்பிச்சிருக்கு
Photo Credit: Nothing
வரவிருக்கும் நத்திங் ஃபிளாக்ஷிப், கிளிஃப் இடைமுகத்திற்குப் பதிலாக புதிய கிளிஃப் மேட்ரிக்ஸைக் கொண்டிருக்கும்
இந்தியாவில ஒரு புதுமையான பிராண்டா Nothing நிறுவனம், தங்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கு. அவங்களோட வெளிப்படையான (transparent) டிசைன், தனித்துவமான கிளிஃப் இன்டர்பேஸ் (Glyph Interface) இதெல்லாமே மக்களை ரொம்பவே கவர்ந்தது. இப்போ, Nothing-ன் அடுத்த அதிரடியான மாடலான Nothing Phone 3 பத்தி சூடான தகவல்கள் கசிய ஆரம்பிச்சிருக்கு! இந்த போன்ல 50-மெகாபிக்சல் கொண்ட மூன்று கேமராக்கள் இருக்குமாம். ஜூலை 1-ஆம் தேதி உலக அறிமுகம் நடக்கவிருக்கிற நிலையில, பல முக்கிய அம்சங்கள் லீக் ஆகியிருக்கு. வாங்க, இந்த Nothing Phone 3 பத்தி டீட்டெய்லா பார்ப்போம்.
Nothing Phone 3, ஜூலை 1-ஆம் தேதி இந்தியாவிலும், உலக சந்தைகளிலும் அறிமுகமாகப் போகுது. இந்த போனோட முக்கிய அம்சங்கள் பத்தி வெளியான தகவல்கள், டெக் உலகத்துல பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கு.
அசத்தலான மூன்று கேமராக்கள்: Nothing Phone 3-ல 50-மெகாபிக்சல் கொண்ட மூன்று கேமராக்கள் இருக்கும்னு தகவல்கள் வெளியாகி இருக்கு. இதுல ஒரு மெயின் கேமரா, ஒரு அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட ஒரு பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஷூட்டர் ஆகியவை அடங்கும். பெரிஸ்கோப் லென்ஸ் என்பது Nothing போன்களுக்கு இதுவே முதல் முறை. இது தூரத்துல இருக்குற காட்சிகளை கூட ரொம்பவே தெளிவா எடுக்க உதவும்.
பிரைட் டிஸ்ப்ளே: 6.7 இன்ச் LTPO OLED ஸ்கிரீனுடன் 1.5K ரெசல்யூஷனைக் கொண்டிருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. LTPO தொழில்நுட்பம் இருக்குறதால, டிஸ்ப்ளேவோட ரெஃப்ரெஷ் ரேட், தேவைக்கேற்ப தானாகவே மாறி, பேட்டரியை மிச்சப்படுத்தும். இது வீடியோ பார்க்கும்போது, கேம்ஸ் விளையாடும்போது ஒரு சிறந்த காட்சிக் அனுபவத்தை கொடுக்கும்.
சக்தி வாய்ந்த ப்ராசஸர்: இந்த போன்ல Snapdragon 8s Gen 4 சிப்செட் இருக்கலாம்னு எதிர்பார்க்கப்படுது. இது ஒரு ஃபிளாக்ஷிப்-நிலை ப்ராசஸர். இது கேமிங், மல்டி டாஸ்கிங், ஹை-எண்ட் அப்ளிகேஷன்கள்னு எந்த வேலைக்கும் சும்மா பறக்கும். பெர்ஃபார்மன்ஸை பொறுத்தவரை எந்தக் குறையும் இருக்காது.
Nothing Phone 3-ல ஒரு பெரிய 5,150mAh பேட்டரி இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. இது ஒருநாள் முழுசுக்கும் மேலாகவே சார்ஜ் தாங்கும். அதோட, 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்குறது ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்ட்! அதாவது, போன் ரொம்பவே வேகமா சார்ஜ் ஆகிடும். வயர்லெஸ் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் இதில் இருக்குமாம்.
மற்ற அம்சங்களைப் பொறுத்தவரை, Nothing-ன் தனித்துவமான கிளிஃப் இன்டர்பேஸ் (Glyph Interface) இந்த போன்லயும் இருக்கும். ஆனா, இந்த முறை அதுல என்னென்ன மாற்றங்கள் இருக்கும்னு தெரியலை. ஏற்கனவே வெளியான டீசர்ல, சில புதுமைக்களுக்காக பட்டன் அமைப்புல மாற்றம் கொண்டு வரப்பட்டிருந்தது. இது போக, Nothing-ன் தனித்துவமான Android அனுபவமும் இந்த போனில் கிடைக்கும்.
Nothing Phone 3, அதன் சக்திவாய்ந்த அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட கேமரா சிஸ்டம், மற்றும் வேகமான சார்ஜிங் வசதிகளுடன் இந்திய மற்றும் உலக சந்தைகளில் ஒரு பெரிய கவனத்தை ஈர்க்கும்னு எதிர்பார்க்கலாம். ஜூலை 1-ஆம் தேதி முழுமையான விவரங்கள் வெளியாகும் வரை காத்திருப்போம்!
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Reno 16 Series Early Leak Hints at Launch Timeline, Dimensity 8500 Chipset and Other Key Features