இந்த மாத இறுதியில் வெளியாக இருக்கும் சையோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட் போனின் செயல்பாடு குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
சமீபத்தில வெளிவந்த வீடியோவில், சையோமி மி மேக்ஸ் போனின் வடிவத்துடன் அதன் செயல்பாடுகள் குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளது.
யூ-ட்யூபில் வெளியான இந்த வீடியோவில், மி மேக்ஸ் 3 ஸ்மார்ட் போன் கறுப்பு மற்றும் தங்க நிறத்தில் விற்பனைக்கு வர உள்ளது எனவும் தெரிய வந்திருக்கிறது. மெட்டல் வடிவமைப்பில், மேல் கீழ் என இரு கேமராக்கள், ஃபிங்கர் ப்ரிண்ட் ஸ்கேனர், ஆகியவை குறித்த விவரங்களும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. தவிர, 6.9 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட சையோமி மி மேக்ஸ் 3 ஃபோனில், 5500mAh மாமோத் பேட்டரி, 12 மெகாபிக்சல் கொண்ட கேமரா, 5 மெகாபிக்சல் கொண்ட சென்சர் ஆகிய வசதிகளும் உள்ளன.
முழு ஹெச்.டி (1080x2160 பிக்ஸல்) டிஸ்ப்ளே, ஓக்டா-கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 636 SoC செயல்பாட்டில், 3ஜிபி RAM , 32 ஜிபி ஸ்டோரேஜ், 4 ஜிபி RAM 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி RAM 128 ஜிபி ஸ்டோரேஜ் என மூன்று வித்தியாச ஸ்டோரேஜ் வசதிகளில் இந்த ஃபோன் வெளிவரும் என்றும் வீடியோவில் கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, சையோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட் போனில், AI எனப்படும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்