Sony Xperia L4 இந்த வசந்த காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் வாங்குவதற்கு கிடைக்கும்.
Sony Xperia L4, HD+ wide டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது மற்றும் மல்டி விண்டோ UI உடன் வருகிறது
Sony Xperia L4 புதிய ஸ்மார்ட்போன் மாடலாக ஜப்பானிய நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய சோனி எக்ஸ்பீரியா போன் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் வாட்டர் டிராப்-ஸ்டைல் டிஸ்பிளே நாட்சைக் கொண்டுள்ளது. சோனியின் தனியுரிம மல்டி விண்டோ யுஐ ஆரம்பத்தில் எக்ஸ்பீரியா 1 ஃபிளாக்ஷிப்பில் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு பார்சிலோனாவில் நடந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரசில் (MWC) சோனி வெளியிட்ட Xperia L3-யின் தொடராக Xperia L4 வடிவமைக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தலாக, ஸ்மார்ட்போன் முக்கியமாக ஒரு பெரிய பேட்டரி மற்றும் பிற மாற்றங்களுக்கிடையில் பல்வேறு வடிவமைப்பு நிலை மாற்றங்களை வழங்குகிறது.
கருப்பு மற்றும் நீல கலர் ஆப்ஷன்களுடன், Sony Xperia L4 இந்த வசந்த காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் விற்பனைக்கு வரும். இருப்பினும், நிறுவனம் இன்னும் விலை விவரங்களை அறிவிக்கவில்லை.
சொல்லப்பட்டால், Sony Xperia L4 அதிக மதிப்புள்ள ஸ்மார்ட்போனாக இருக்க வாய்ப்பில்லை. இது ஒரு புதிய நுழைவு நிலை ஸ்மார்ட்போனாக வடிவமைக்கப்பட்டுள்ளது - Sony Xperia L3-யின் தொடர் MWC 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் ஐரோப்பாவில் EUR 200 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15,500) விலையுடன் விற்பனைக்கு வந்தது.
டூயல்-சிம் (நானோ) Sony Xperia L4, சோனியின் தனியுரிம மல்டி விண்டோ UI உடன் Android 9 Pie-ல் இயங்குகிறது. இது 21:9 aspect ratio உடன் 6.2-inch HD+ (1680x720 pixels) wide டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த போன் 3GB RAM உடன் இணைக்கப்பட்டு octa-core MediaTek MT6762 SoC-யால் இயக்கப்படுகிறது. இதில் 64GB ஆன்போர்டு ஸ்டோரேஜும் உள்ளது. இதனை, மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512GB வரை) விரிவாக்கம் செய்யலாம்.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, Sony Xperia L4 டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில் வருகிறது, இதில் f/2.0 lens உடன் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், field-of-view (FoV) of 117 degrees கொண்ட f/2.2 lens உடன் 5 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் f/2.4 lens உடன் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் ஆகியவை அடங்கும். இந்த போன் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவையும் கொண்டுள்ளது, இது, 78-degree FoV உடன் f/2.0 lens-ஐக் கொண்டுள்ளது.
Sony Xperia L4-ன் இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போன் in-display fingerprint சென்சாருடனும் வருகிறது. இதில் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 3,580mAh பேட்டரி உள்ளது. தவிர, Sony Xperia L4, 159x71x8.7mm அளவு மற்றும் 178 கிராம் எடை கொண்டதாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Supernova’s First Moments Show Olive-Shaped Blast in Groundbreaking Observations
Intense Solar Storm With Huge CMEs Forced Astronauts to Take Shelter on the ISS
Nearby Super-Earth GJ 251 c Could Help Learn About Worlds That Once Supported Life, Astronomers Say
James Webb Telescope May Have Spotted First Generation of Stars in the Universe