Photo Credit: Realme
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Realme GT 7 Pro செல்போன் பற்றி தான்.
Realme நிறுவனம் இந்தியாவில் Realme GT 7 Pro செல்போன் மாடலை அறிமுகம் செய்கிறது. Realme GT 2 Pro எனப்படும் கடைசி GT ப்ரோ மாடல் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய மாடல் வருகிறது. Realme GT 7 Pro முந்தைய மாடல்களை விட ஏராளமான அப்டேட்களை கொண்டுள்ளது. புதிய ஹார்டுவேர் அமைப்பையும் பெற்றுள்ளது. புதிய போனின் விலை முந்தைய மாடலை விட அதிகமாக உள்ளது.
இந்தியாவில் Realme GT 7 Pro விலை 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல் 59,999 ரூபாய் விலையில் ஆரம்பம் ஆகிறது. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடல் 65,999 ரூபாய் விலைக்கு கிடைக்கிறது. இது நவம்பர் 29 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் ரியல்மியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் அமேசான் ஆகிய இரண்டிலும் விற்பனைக்கு வரும். GT 7 Pro ஆனது மார்ஸ் ஆரஞ்சு மற்றும் கேலக்ஸி கிரே ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்.
Realme GT 7 Pro ஆனது 6.78-இன்ச் LTPO AMOLED பேனலைக் கொண்டுள்ளது. இது முழு-HD+ தெளிவுத்திறனையும் அதிகபட்சமாக 120Hz திரை புதுப்பிப்பு வீதத்தையும் வழங்குகிறது. டிஸ்ப்ளே குவாட்-வளைந்த திரையைக் கொண்டுள்ளது. டால்பி விஷன் மற்றும் HDR10+ வீடியோக்களை சப்போர்ட் செய்கிறது. இந்த செல்போன் மாடலின் பாடி அலுமினியத்தால் ஆனது. AG என்கிற கண்ணாடி பின்புற பேனலுடன், தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP69 மதிப்பீடப்பட்ட கட்டமைப்பை கொண்டுள்ளது. 222 கிராம் எடையுடையது.
Realme GT 7 Pro இந்தியாவில் புதிய Snapdragon 8 Elite SoC சிப்செட் பெறும் முதல் போன் ஆகும். இது 16ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS 4.0 மெமரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. சிப்செட் 3nm ஃபேப்ரிகேஷன் செயல்முறையைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. அதன் தற்போதைய Snapdragon 8 Gen 3 SoC சிப்பை விட பல மடங்கு செயல்திறன் கொண்டது. இது பெரும்பாலான பிரீமியம் மற்றும் அல்ட்ரா-பிரீமியம் ஃபிளாக்ஷிப் செல்போன்களில் கிடைக்கிறது.
செயல்திறன் சார்ந்த சாதனமாக இந்த செல்போன் சந்தைப்படுத்தப்பட்டாலும், இது அற்புதமான கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது. இந்த ஃபோனில் Sony IMX906 50-மெகாபிக்சல் முதன்மை கேமரா, Sony IMX882 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் Sony IMX355 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவை உள்ளன. செல்ஃபிகள் எடுக்க 16 மெகாபிக்சல் முன் பக்க கேமரா உள்ளது.
Realme இன் GT 7 Pro ஆனது Realme UI 6.0 மூலம் இயக்குகிறது. இது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்டது. மூன்று வருட மென்பொருள் புதுப்பிப்புகளையும் நான்கு வருட பாதுகாப்பு புதுப்பிப்புகளையும் நிறுவனம் வழங்குகிறது. சீனா மாடல் 6,500mAh பேட்டரியுடன் அறிவிக்கப்பட்டது, ஆனால் Realme இந்தியா மாடலை 5,800mAh பேட்டரியுடன் அறிவித்துள்ளது. ஃபோன் 120W வேகமான சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. ஜிடி 7 ப்ரோ வெறும் 30 நிமிடங்களில் 1 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்யப்படும் என்று Realme கூறுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்