புது வேலை வாய்ப்பு! SBI YONO 2.0 வருது! இனி மத்த பேங்க் கஸ்டமரும் யூஸ் பண்ணலாமா? Google Pay-க்கு போட்டியா?

பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது டிஜிட்டல் பேங்கிங் தளமான YONO 2.0-ஐ அறிமுகம் செய்துள்ளது

புது வேலை வாய்ப்பு! SBI YONO 2.0 வருது! இனி மத்த பேங்க் கஸ்டமரும் யூஸ் பண்ணலாமா? Google Pay-க்கு போட்டியா?

Photo Credit: Pexels/Anete Lusina

SBI YONO 2.0 டிஜிட்டல் வங்கி தளம் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்கும்.

ஹைலைட்ஸ்
  • SBI, தனது டிஜிட்டல் தளமான YONO-ன் மேம்படுத்தப்பட்ட பதிப்பான YONO 2.0-ஐ அற
  • 20 கோடி யூஸர்களாக இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயம்
  • 6,500 புதிய பணியாளர்களை நியமிக்கத் திட்டம்
விளம்பரம்

நம்ம நாட்டுல இருக்குற வங்கிகள்ல, அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட ஒரு மாஸ் பேங்க்னா அது நம்ம ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தான்! இவங்களுடைய டிஜிட்டல் பேங்கிங் தளமான YONO (You Only Need One), இப்போ ஒரு பெரிய அப்கிரேடைப் பெற்றிருக்கு! அதான் YONO 2.0. SBI-யின் தலைவர் சி.எஸ். செட்டி (C.S. Setty) அவர்கள், சமீபத்துல இந்த YONO 2.0 தளத்தை அறிமுகப்படுத்தியிருக்காங்க! இது வெறும் ஆப் அப்டேட் மட்டும் இல்ல, SBI-யின் டிஜிட்டல் பேங்கிங் பயணத்தையே மாத்தப்போகிற ஒரு பெரிய புரட்சின்னு சொல்லலாம்.

20 கோடி பயனர்கள் இலக்கு:

YONO ஆப்-ஐ இப்போ சுமார் 10 கோடி பேர் யூஸ் பண்ணிட்டு இருக்காங்க. ஆனா, இந்த YONO 2.0 மூலமா, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள்ள இந்த யூஸர் எண்ணிக்கையை 20 கோடியாக இரட்டிப்பாக்க SBI இலக்கு நிர்ணயிச்சிருக்கு! இந்த புதிய தளம், இந்த பிரம்மாண்டமான 20 கோடி வாடிக்கையாளர்களை கையாள்வதற்காகவே ஆரம்பத்துல இருந்தே வலுவான கட்டமைப்போடு (Strong Infrastructure) உருவாக்கப்பட்டிருக்கு.

தொழில்நுட்பத்தில் என்ன புதுமை?

YONO 2.0-வின் முக்கிய சிறப்பம்சமே, ஒருங்கிணைந்த டிஜிட்டல் கட்டமைப்பு (Unified Digital Architecture) தான்!

பொதுவான குறியீடு: இப்போ மொபைல் பேங்கிங் (YONO App) மற்றும் இன்டர்நெட் பேங்கிங் (YONO Net Banking) ரெண்டுக்குமே ஒரே தொழில்நுட்பக் குறியீடு (Common Code) பயன்படுத்தப்பட்டிருக்கு!

தடையற்ற அனுபவம்: இதனால, ஒரு வாடிக்கையாளர் மொபைல்ல ஒரு வேலையை ஆரம்பிச்சுட்டு, அதை இன்டர்நெட் பேங்கிங்லயோ அல்லது வங்கி கிளைகள்லயோ (Branch) வந்து எந்தத் தடையுமில்லாம முடிக்க முடியும்! இது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சீரான மற்றும் எளிமையான அனுபவத்தை உறுதி செய்யும்!
எளிமையான KYC: KYC மற்றும் re-KYC நடைமுறைகளும் எளிமையாக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு மற்றும் ஊழியர் நியமனம்:

YONO 2.0 லான்ச் மூலமா, வங்கி சேவையை டிஜிட்டல் தளத்துக்கு மாத்துறதுக்கு, SBI ஒரு பெரிய பிளான் வச்சிருக்காங்க! அதுக்காக, 6,500 புதிய பணியாளர்களை நியமிக்கத் திட்டமிட்டிருக்காங்க! (மொத்தம் 10,000 பணியாளர்கள், அதில் 3,500 பேர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்). இந்த ஊழியர்கள், வங்கி கிளைகள்ல ஃப்ளோர் மேனேஜர்களாக (Floor Managers) இருந்து, வாடிக்கையாளர்களுக்கு YONO 2.0-ஐப் பயன்படுத்துறதுக்கு உதவி செய்வாங்க. இது டிஜிட்டல்மயமாக்கலை கிராமப்புறங்கள் வரை கொண்டு போக உதவும்.

Google Pay-க்கு நேரடிப் போட்டி:

YONO 2.0-ல், UPI பரிவர்த்தனைக்கான தொழில்நுட்பத்தை SBI முழுசா மாத்தி அமைச்சிருக்கு! இதன் மூலம், Google Pay மற்றும் PhonePe போன்ற பெரிய UPI தளங்களுக்கு நேரடியாகப் போட்டியாக இது இருக்கும்னு சொல்லியிருக்காங்க. YONO 2.0-ன் முழு அம்சங்களும் அடுத்த 6 முதல் 8 மாதங்களுக்குள்ள படிப்படியாக வெளியிடப்படும்னு எதிர்பார்க்கப்படுது. இந்த அப்டேட், வங்கிச் சேவையை இன்னும் சுலபமா மாத்தப் போகுது. இந்த YONO 2.0 பத்தி உங்க கருத்து என்னன்னு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் ...மேலும்

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. விவோ-வோட அடுத்த அதிரடி! 7,200mAh பேட்டரி, IP69 பாதுகாப்பு - ஆனா இது 5G இல்லையா?
  2. ரெட்மி நோட் 15 ப்ரோ சீரிஸ் வந்தாச்சு! 200MP கேமரா, IP69 ரேட்டிங்-னு மொரட்டுத்தனமா இருக்கு
  3. சார்ஜ் போட மறந்துட்டீங்களா? கவலையே படாதீங்க! 10,001mAh பேட்டரியுடன் Realme P4 Power 5G வந்தாச்சு
  4. நீங்க ஆவலோட வெயிட் பண்ண Find X9s வராதாம்! ஆனா அதைவிட ஒரு பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கு
  5. சாம்சங் ரசிகர்களே ரெடியா? Galaxy S26 சீரிஸின் விலை விவரங்கள் இதோ! Ultra மாடல் விலை குறையப்போகுதா?
  6. நீங்க ஆவலோட காத்திருந்த அந்த நாள் வந்தாச்சு! iPhone 16-ன் விலை சல்லுன்னு குறைஞ்சிருக்கு - வெறும் ரூ. 64,900-க்கே வாங்கலாம்
  7. பஸ்ஸுல யாராவது உங்க போனை எட்டிப் பாக்குறாங்களா? இதோ சாம்சங்-ன் மரண மாஸ் தீர்வு
  8. உங்க வாட்ஸ்அப் சேட் இனி பத்திரம்! சைபர் தாக்குதல்களைத் தடுக்க மெட்டா கொண்டு வந்த மிரட்டலான Strict Account Settings
  9. Xiaomi-யின் அடுத்த மாஸ்டர்பீஸ்! 200MP கேமரா செட்டப் உடன் வரும் Xiaomi 17 Max - கேமரா போன் பிரியர்களுக்கு கொண்டாட்டம்
  10. சாம்சங் ரசிகர்களே, இதோ அடுத்த சம்பவம்! ஸ்லிம் லுக்கில் மிரட்டும் Galaxy A57 - அஃபிஷியல் ரெண்டர்ஸ் அவுட்
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »