இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி S20 ஸ்மார்ட்போன் 70,499 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது
சாம்சங் கேலக்ஸி S20 ஃபேன் எடிஷன் எனப்படும் aka கேலக்ஸி S20 லைட் ஸ்மார்ட்போன் 4,500mAh பேட்டரி சக்தியுடன் வரலாம் என்று தகவல்கள் வந்துள்ளன.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S20 ஸ்மார்ட்போனின் லைட் வெர்ஷனை தயார் செய்யும் பணியில் மும்முரமாக இருப்பதாக ஒரு உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. அது ஃஎடிஷன் என்ற பெயரில் அல்லது லைட் வெர்ஷன் என்ற பெயரில் அறிமுகமாகலாம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது கேலக்ஸி S20 லைட் வெர்ஷனைப் பற்றிய கூடுதல் தகவல்கள், அதாவது இதன் பேட்டரி சக்தி, கலர் அம்சங்கள் குறித்த விவரங்கள் கசிந்துள்ளன. அதன்படி, சாம்சங் கேலக்ஸி S20 லைட் ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் EB-BG781ABY என்றும் இதில் 4,370 mAh சக்தி கொண்ட பேட்டரி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தத் தகவல் டச் பிளாக், கேலக்ஸி கிளப் உள்ளிட்ட இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த ஜனவரி மாதம் கேலக்ஸி S10 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் 4,500 mAh சக்தி கொண்ட பேட்டரி வழங்கப்பட்டிருந்தது.
கேலக்ஸி S20 லைட் ஸ்மார்ட்போன் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு, வெள்ளை ஆகிய நிறங்களில் உள்ளதாகவும், முதலில் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இந்தியா உட்பட மற்ற நாடுகளுக்கு வரும் போது இதே நிற வேரியண்டுகளாக அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. குவால்காம் ஸ்நாப்டிராகன் 865 SoC பிராசசர், 6ஜிபி ரேம், 120Hz டிஸ்பிளே உள்ளிட்ட அம்சங்கள் இதில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி S20 லைட் பற்றி இவ்வாறு பல தகவல்கள் வந்தாலும், சாம்சங் தரப்பில் எதுவும் அறிவிக்கப்படவில்லை. வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி இதுதொடர்பான அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்