Samsung Galaxy S10 Lite-ன் ஒரே 8GB + 128GB மாடல் ரூ. 39,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் இப்போது 6GB RAM மாடலை நாட்டில் வெளியிடவில்லை.
Samsung Galaxy S10 Lite, hole-punch வடிவமைப்புடன் Infinity-O டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது
Samsung Galaxy S10 Lite இப்போது இந்தியாவில் வெளியாகியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் CES 2020-க்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங்கின் லைட் இரட்டையரின் இரண்டாவது போன் இதுவாகும். தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனம், Galaxy S10 Lite-ஐ ஏற்கனவே நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் Samsung Galaxy S10 Lite-ன் விலை, விற்பனை தேதி, சலுகைகள்:
Samsung Galaxy S10 Lite-ன் ஒரே 8GB + 128GB மாடல் ரூ. 39,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் இப்போது 6GB RAM மாடலை நாட்டில் வெளியிடவில்லை. புதிய Samsung ஸ்மார்ட்போன் Prism White, Prism Black மற்றும் Prism Blue கலர் ஆப்ஷன்களில் வழங்கப்படும். Samsung Galaxy S10 Lite-க்கான முன்கூட்டிய ஆர்டர்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு திறக்கப்படும் என்றும், இது Flipkart, Samsung.com மற்றும் முக்கிய ஆஃப்லைன் கடைகள் வழியாக பிப்ரவரி 4 முதல் கிடைக்கும் என்றும் நிறுவனம் கூறுகிறது.
சலுகைகளைப் பொறுத்தவரை, சாம்சங் ஒரு முன்பதிவு விளம்பரத்தை இயக்குகிறது, இதில் ஒரு முறை திரை மாற்றீடு வெறும் ரூ. 1,999 ஆகும். வாடிக்கையாளர்கள், ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி செலுத்தப்படும் கட்டணங்களில் ரூ. 3,000 கேஷ்பேக்கிற்கு தகுதி பெறுவார்கள்.
Samsung Galaxy S10 Lite-ன் விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள்:
டூயல்-சிம் (நானோ)Samsung Galaxy S10 Lite, One UI 2.0 அடிப்படியிலான Android 10-ல் இயங்குகிறது. இது 20:9 aspect ratio உடன் 6.7-inch full-HD+ (1080 x 2400 pixels) Infinity-O Super AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த போன் 8GB RAM உடன் இணைக்கப்பட்டு, octa-core Qualcomm Snapdragon 855 SoC-யால் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
சாம்சங், இந்த போனில், 48-megapixel முதன்மை சென்சார், ultra-wide-angle lens உடந் 12-megapixel இரண்டாம் நிலை சென்சார் மற்றும் f/2.4 lens உடன் 5-megapixel சென்சார் அடங்கிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை வழங்குகிறது. இதில், f/2.4 lens கொண்ட macro lens உடன் 5-megapixel செல்ஃபி கேமராவும் உள்ளது.
Galaxy S10 Lite, 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதனை microSD card வழியாக (1TB வரை) விரிவாக்கம் செய்யலாம். போனின் இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும். மேலும், இது in-display fingerprint சென்சாரையும் கொண்டுள்ளது. இந்த போன் 75.6x162.5x8.1mm அளவீட்டையும், 186 கிராம் எடையையும் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features