சமீபத்திய கசிவு ஒன்று, One UI 8.5 புதுப்பிப்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படும் Galaxy சாதனங்களின் நீண்ட பட்டியலை வெளிப்படுத்தியது.
Photo Credit: Samsung
சாம்சங் போன் வச்சிருக்கவங்களுக்கு எப்போவுமே அப்டேட் மேல ஒரு கண் இருக்கும். ஆமாங்க, இப்போ நம்ம டேப்லெட் ரசிகர்களுக்காக ஒரு செம்ம சுடச்சுட அப்டேட் வந்திருக்கு. Samsung அவங்களோட அடுத்த மாஸ் மென்பொருளான One UI 8.5 (Android 16 அடிப்படையிலானது) அப்டேட்டை அவங்களோட டேப்லெட் வரிசையில டெஸ்ட் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. முதல்ல ஒரு சில மாடல்களுக்கு மட்டும் தான் டெஸ்டிங் போயிட்டு இருந்துச்சு. ஆனா இப்போ வந்திருக்கிற தகவல்படி, ஒரு பெரிய லிஸ்டே ரெடி ஆகியிருக்கு.
● Galaxy Tab S11 & S11 Ultra: இப்போதான் லான்ச் ஆனதால இதுதான் முதல் ஆளா அப்டேட்டை தட்டித்தூக்கும்.
● Galaxy Tab S10 சீரிஸ் & S10 FE: பட்ஜெட் கிங் FE மாடல்களுக்கும் டெஸ்டிங் ஸ்டார்ட் ஆகிடுச்சு.
● Galaxy Tab S9 & S8 சீரிஸ்: பழைய மாடல் தானேன்னு சாம்சங் இதை கைவிடல, Tab S8-க்கும் அப்டேட் கன்பார்ம்!
மொபைல்ல வர்ற பீச்சர்ஸை விட டேப்லெட்ல ஒரு சில ஸ்பெஷல் வித்தைகளை சாம்சங் இறக்குறாங்க. அதுல மெயினானது "Storage Share". உங்க கேலக்ஸி போன்ல இருக்குற போட்டோவையோ இல்ல ஃபைலையோ, டேப்லெட்ல ஒரு லோக்கல் டிரைவ் மாதிரியே ஓபன் பண்ணிக்கலாம். ஃபைல் டிரான்ஸ்பர் பண்ணி டைம் வேஸ்ட் பண்ணவே தேவையில்லை.
அப்புறம் நம்ம 'டெக்ஸ்' (Samsung DeX) இப்போ இன்னும் ஸ்மூத்தா மாறப்போகுது. பெரிய ஸ்கிரீன்ல மல்டி-டாஸ்கிங் பண்றதுக்கு ஏத்த மாதிரி விண்டோஸ் மேனேஜ்மென்ட்ல நிறைய மாற்றங்கள் வருது. போட்டோ எடிட்டிங் பண்றவங்களுக்கு Photo Assist AI-ல 'Continuous Generation' வசதி வருது. அதாவது ஒரு வாட்டி எடிட் பண்ணிட்டு சேவ் பண்ணிட்டு மறுபடியும் பண்ண தேவையில்லை, அப்படியே தொடர்ந்து எடிட் பண்ணிட்டே போலாம்.
எப்போ ரிலீஸ்?
இப்போதைக்கு இது 'இன்டெர்னல் டெஸ்டிங்' (Internal Testing) லெவல்ல தான் இருக்கு. பிப்ரவரி 2026-ல Galaxy S26 சீரிஸ் லான்ச் ஆகும்போது, அதுலதான் இந்த One UI 8.5 அபிஷியலா ரிலீஸ் ஆகும். அதுக்கப்புறம் மார்ச் அல்லது ஏப்ரல் மாசம் உங்க டேப்லெட்டுக்கு இந்த அப்டேட் மெதுவா வந்து சேரும். பெரிய ஸ்கிரீன்ல Android 16 அனுபவம் எப்படி இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க? இந்த அப்டேட்ல வேற என்ன பீச்சர்ஸ் வேணும்னு ஆசைப்படுறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.
...மேலும்