இந்தியாவில் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் 77,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Samsung Galaxy Note 20 was launched at Galaxy Unpacked 2020 virtual event on Wednesday
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 20, கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா அறிமுகம் செய்துள்ளது. அதோடு ஸ்மார்ட்வாட்ச், மடக்கு ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த விவரங்களை இங்கு காணலாம்.
சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக கேலக்ஸி நோட் 20 மற்றும் நோட் 20 அல்ட்ரா 5ஜி போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதற்கான முன்பதிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதன் அறிமுக நிகழ்வில், கேலக்ஸி Z Fold 2 மடக்கு ஸ்மார்ட்போன், கேலக்ஸி டேப் S7, டேப் S7+ மற்றும் கேலக்ஸி வாட்ச் 3 ஸ்மார்ட்வாட்ச், கேலக்ஸி பட்ஸ் ஆகியவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் 77,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 4ஜி வேரியன்ட் ஆகும். கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜியின் விலை, 1,04,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டின் மெமரியும் 256ஜிபி ஆகும்.
கேலக்ஸி நோட் 20 முன்பதிவு செய்தால் 6 ஆயிரம் ரூபாய் கேஷ்பேக் ஆஃபரும், நோட் 20 அல்ட்ரா 5ஜி முன்பதிவு செய்தால் 9,000 ரூபாய் கேஷ்பேக் ஆஃபரும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு சாம்சங்கின் அதிகாரப்பூர்வ இணையதளமான samsung.com பக்கத்திலும், மற்ற ஷோரூம்களிலும் நடைபெறுகிறது. மேலும், 5,000 ரூபாய் வரையில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உள்ளது.
கேலக்ஸி நோட் 20, நோட் 20 அல்ட்ரா இரண்டும் இரண்டு விதமான கலர் வேரியன்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதற்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதன் விற்பனை ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் ஆரம்பமாகிறது. கூடுதலாக கேலக்ஸி நோட் 20க்கு ரூ.7,000 மதிப்பிலான சலுகையும், கேலக்ஸி நோட் 20 அல்ட்ராவுக்கு ரூ.10,000 மதிப்பிலான சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Is Nord the iPhone SE of the OnePlus world? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
iQOO Pad Ultra Set to Launch on September 29; Design, Key Specifications Revealed