Photo Credit: MySmartPrice
மொபைல் உலகில் மன்னனாக இருந்து வரும் சாம்சங் நிறுவனம் 6,800 ஆம்ப் திறன் கொண்ட பேட்டரி மொபைலை வெளியிடுகிறது.
சாம்சங் கேலக்ஸி எம்41 என்று அதற்கு பெயரிடப்பட்டுள்ளது. நமக்கு கிடைத்த ஸ்க்ரீன் ஷாட்டுகளின் அடிப்படையில் இந்த மொபைலுக்கு கடந்த 28ம்தேதி சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளன.
3 கேமராக்கள் மற்றும் 6 ஜி.பி. ரேமுடன் இந்த மொபைல் சந்தைக்கு வருகிறது.
முதன்மைக் கேமரா 64 மெகா பிக்சலை கொண்டதாக இருக்கும். இரண்டாம் நிலை கேமரா 12 மெகா பிக்சல் கொண்டதாகவும், 5 மெகா பிக்சல் ஆழமான சென்சார் உடையதாகவும் இருக்கும்.
6 ஜிபி ரேம் செல்போனின் வேகத்திற்கு சிறப்பாக உதவும்.
இந்தியாவில் எவ்வளவு ரூபாய்க்கு இந்த போன் விற்பனை செய்யப்படும் என்ற விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
முன்பு எம். 40 என்ற மொபைலை சாம்சங் நிறுவனம் வெளியிட்டிருந்தது. 3,500 ஆம்ப் பேட்டரி பவருடன், 6 ஜி.பி. ரேம் மற்றும் குவால்கம் ஸ்நாப்டிராகன் 675 எஸ்.ஓ.சி. உடன் பல்வேறு சிறப்பம்சங்களை இந்த மொபைல் கொண்டுள்ளது.
இந்தியாவில் தற்போது சாம்சங் எம்.40 மொபைல் 15,999-க்கு விற்பனையாகிறது.
Why do Indians love Xiaomi TVs so much? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்