M20, M30-யை தொடர்ந்து வருகிறது M40: சாம்சங் கேலக்சி M40-யின் விலை மற்றும் அம்சங்கள்!

M20, M30-யை தொடர்ந்து வருகிறது M40: சாம்சங் கேலக்சி M40-யின் விலை மற்றும் அம்சங்கள்!

சாம்சங் கேலக்சி M40

விளம்பரம்

சாம்சங் கேலக்சியின் M தொடரில் அடுத்த ஸ்மார்ட்போனான M40 இந்தியாவில் அடுத்த மாதத்தில் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை, ரூபாய் 25,000-மாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் துவக்கத்திலேயே, சாம்சங் கேலக்சியின் M தொடர் ஸ்மார்ட்போன்களான M10, M20 மற்றும் M30 ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதை அடுத்து அந்த வரிசையில் நான்காவது ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்தவுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன், தன் முந்தைய வரிசையிலான ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடுகையில், மிகுந்த திறன் கொண்டு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த ஸ்மார்ட்போன்பற்றி வெளியாகியுள்ள தகவலின் படி மற்ற மூன்று ஸ்மார்ட்போன்களிலிருந்து, இந்த ஸ்மார்ட்போன் வேறுபட்டிருக்கும். இதுவரை வந்த ஸ்மார்ட்போன்களில், எக்சினஸ்(Exynos) ப்ராசஸர் பொருத்தப்பட்டிருந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் ப்ராசஸர் கொண்டு வெளியாகவுள்ளது என கூறப்படுகிறது.  இதுவரை வெளியான சாம்சங் கெலக்சி M10, கெலக்சி M20 மற்றும் கெலக்சி M30 ஆகிய ஸ்மார்ட்போன்களில் எக்சினஸ் ப்ராசஸர் பொருத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, சாம்சங் கேலக்சி M40 ஸ்னேப்ட்ராகன் 675 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு கொண்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9.0 பை(Android 9.0 Pie) அமைப்பு கொண்டிருக்கும். மேலும் இதன் பேட்டரி 5000mAh ஆக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கு முந்தைய மாடலான சாம்சங் கேலக்சி M30 இந்தியாவில், கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டு வகைகளில் வெளியிடப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் 4GB+64GB வகை 14,990 ரூபாய்க்கும் 6GB+128GB வகை 17,990 ரூபாய்க்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்னதாக, சாம்சங் கேலக்சி M10, கெலக்சி M20 ஸ்மார்ட்போன்கள் ஜனவரி மாதத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Written with inputs from IANS

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Samsung, Samsung Galaxy M40
Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. மேலும்
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »