முழு நேர விற்பனைக்கு வந்த சாம்சங் 'கேலக்சி M40': விலை, சிறப்பம்சங்கள் உள்ளே!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 24 ஜூன் 2019 14:07 IST
ஹைலைட்ஸ்
  • அமேசான், சாம்சங் தளங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை
  • ஸ்னேப்ட்ராகன் 675 எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டுள்ளது
  • மிட்நைட் ப்ளூ மற்றும் சீவாட்டர் ப்ளூ என இரு வண்ணங்களை கொண்டுள்ளது

இன்பினிடி-ஓ திரையை கொண்டுள்ளது இந்த இந்த 'கேலக்சி M40'

சமீபத்தில் அறிமுகமான சாம்சங் 'கேலக்சி M40' ஸ்மார்ட்போன், தற்போது முழு நேர விற்பனைக்கு வந்துள்ளது. இந்த தகவலை கேட்ஜெட்ஸ் 360 உறுதி செய்துள்ளது. இந்த முழு நேர விற்பனை, இந்தியாவில் 'கேலக்சி M40' ஸ்மார்ட்போன் அறிமுகமான சில நாட்களிலேயே வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், இந்த ஸ்மார்ட்போனை எந்த நேரத்திலும் அமேசான் அல்லது சாம்சங் நிறுவனத்தின் தளங்களில் பெற்றுக்கொள்ளலாம். 

முன்னதாக இந்த ஸ்மார்ட்போனை ஜூன் 11 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. பின் ஜூன் 18 மற்றும் ஜூன் 20 ஆகிய தேதிகளில், இந்த ஸ்மார்ட்போனிற்கான ப்ளாஷ் சேலை அமேசான் மற்றும் சாம்சங் ஆன்லைன் தளங்களில் நடத்தியது சாம்சங் நிறுவனம்.

இந்த ஸ்மார்ட்போன் பற்றி பேசுகையில், சாம்சங் M தொடரில், நான்காவது ஸ்மார்ட்போனான இந்த 'கேலக்சி M40' இன்பினிடி-ஓ திரை (Infinity-O Display) மற்றும் 3 பின்புற கேமராக்களை கொண்டு வெளியாகியுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 675 எஸ் ஓ சி ப்ராசஸர், 32 மெகாபிக்சல் முதன்மை கேமரா பொன்ற அம்சங்களை கொண்டு வெளியாகிள்ளது.

சாம்சங் 'கேலக்சி M40': விலை!

6GB RAM மற்றும் 128GB செமிப்பு அளவு என ஒரே வகையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் 'கேலக்சி M40' ஸ்மார்ட்போன், இந்தியாவில் 19,990 ரூபாய் என்ற விலையில் விற்பனை. சாம்சங் நிறுவனத்தின் அறிவிப்பின்படி, மிட்நைட் ப்ளூ (Midnight Blue) மற்றும் சீவாட்டர் ப்ளூ (Seawater Blue) என இரு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமானது.

சாம்சங் 'கேலக்சி M40': சிறப்பம்சங்கள்!

இந்த சாம்சங் 'கேலக்சி M40' ஸ்மார்ட்போன் 6.3-இன்ச் FHD+ இன்பினிடி-ஓ திரை (Infinity-O Display) கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பில் செயல்படும் இந்த ஸ்மார்ட்போனில், ஸ்னேப்ட்ராகன் 675 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. 

மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். முதன்மையாக 32 மெகாபிக்சல் கேமராவுடன் 5 மெகாபிக்சல் டெப்த் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா என மூன்று கேமராக்களை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன், முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது.

Advertisement

இந்த ஸ்மார்ட்போன் 3500mAh பேட்டரி அளவுடன், 18W அதிவேக சார்ஜர் கொண்டு வெளியாகியுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ளது.
 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Bright, vivid display
  • Modern design
  • Excellent battery life
  • Up-to-date software
  • Good app and gaming performance
  • Bad
  • Runs hot when gaming
  • Strictly average camera quality
  • Hybrid dual-SIM tray
  • No headphone socket
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 16-megapixel
Rear Camera 32-megapixel + 5-megapixel + 8-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iPhone 17e வருது! பட்ஜெட் ஐபோன்ல இப்போ மேக்சேஃப் சப்போர்ட்.. சிங்கிள் கேமராவோட தரமான சம்பவம் பண்ணப்போற ஆப்பிள்
  2. சாம்சங், ஐபோனுக்கே டஃப் கொடுக்க ஷாவ்மி ரெடி! Xiaomi 17 Ultra-வோட குளோபல் ரெண்டர்ஸ் லீக்.. அந்த 200MP ஜூம் வேற லெவல்
  3. பிக்சல் 10ஏ-ல இவ்வளவு சூப்பர் கலர்ஸா? லீக்கான 4 மாஸ் கலர்கள் இதோ! பிப்ரவரி 18-க்காக வெயிட்டிங்
  4. கனவு விலையில் Vivo V50 5G! Flipkart-ல் மெகா டிஸ்கவுண்ட்.. 6000mAh பேட்டரி, Zeiss கேமரா இப்போ இவ்வளவு கம்மி விலையிலா?
  5. இனி பிளாக்ஷிப் போன் பட்ஜெட் விலையில்! Samsung Galaxy S24 FE இப்போ Amazon-ல் செம சீப்.. மிஸ் பண்ணிடாதீங்க
  6. ஸ்மார்ட்போன் ஹிஸ்டரிலயே இப்படி ஒரு பேட்டரியா? 7,400mAh உடன் மிரட்டும் iQOO 15 Ultra! கேமர்களுக்கு இதுதான் இனி ஒரே சாய்ஸ்
  7. பிக்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்! Google Pixel 10a எப்போ வருது தெரியுமா? டிசைன் மற்றும் கலர் டீசர் ரிலீஸ்
  8. விவோவோட அடுத்த தரமான போன் ரெடி! Geekbench-ல் மிரட்டும் Vivo V70 Elite.. பட்ஜெட்ல ஒரு பிளாக்ஷிப் போனா?
  9. விலை குறைந்தது OnePlus 13! பிளிப்கார்ட்டில் ரூ.12,000 வரை சேமிக்க ஒரு சூப்பர் வாய்ப்பு. ஆஃபரை எப்படி பெறுவது?
  10. S26 Ultra-வோட புது கலர்ஸ் பார்த்தீங்களா? சாம்சங் ரசிகர்களுக்குப் பிடிச்ச அந்த ஒரு கலர் திரும்ப வருது! டிசைன்லயும் பெரிய மாற்றம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.