இந்த ஸ்மார்ட்போன் ஜூன் 18-ஆம் தேதியன்று மதியம் 12 மணிக்கு அமேசான் மற்றும் சாம்சங் ஆன்லைன் தளங்களில் விற்பனையாகவுள்ளது.
சாம்சங் கேலக்சி M40
இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் 'கேலக்சி M40'. இந்த 'கேலக்சி M40' ஸ்மார்ட்போன் ஜூன் 11 மாலை 6 மணிக்கு அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போன் பற்றி முன்னதாகவே சாம்சங் நிறுவனம் பல டீசர்களை வெளியிட்டிருந்தது. அதன் அடிப்படியில், இந்த ஸ்மார்ட்போன் இன்பினிடி-ஓ திரை (Infinity-O Display) மற்றும் 3 பின்புற கேமராக்களுடன் வெளியாகவுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. மேலும், இந்த டீசர்களில், சாம்சங் நிறுவனம் 'கேலக்சி M40' ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 675 எஸ் ஓ சி ப்ராசஸர், 32 மெகாபிக்சல் முதன்மை கேமரா பொன்ற அம்சங்களை கொண்டுள்ளது என்பதை தெரிவித்திருந்தது. சாம்சங் M தொடரில், இது நான்காவது ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் 'கேலக்சி M40': விலை!
சாம்சங் 'கேலக்சி M40' ஸ்மார்ட்போன், இந்தியாவில் வெளியானது. 6GB RAM மற்றும் 128GB செமிப்பு அளவு என ஒரே வகையில் வெளியான இந்த ஸ்மார்ட்போன், இந்தியாவில் 19,990 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஜூன் 18-ஆம் தேதியன்று மதியம் 12 மணிக்கு அமேசான் மற்றும் சாம்சங் ஆன்லைன் தளங்களில் விற்பனையாகவுள்ளது.
![]()
சாம்சங் 'கேலக்சி M40': சிறப்பம்சங்கள்!
இந்த சாம்சங் 'கேலக்சி M40' ஸ்மார்ட்போன் 6.3-இன்ச் FHD+ இன்பினிடி-ஓ திரை (Infinity-O Display) கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பில் செயல்படும் இந்த ஸ்மார்ட்போனில், ஸ்னேப்ட்ராகன் 675 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். முதன்மையாக 32 மெகாபிக்சல் கேமராவுடன் 5 மெகாபிக்சல் டெப்த் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா என மூன்று கேமராக்களை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன், முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 3500mAh பேட்டரி அளவுடன், 18W அதிவேக சார்ஜர் கொண்டு வெளியாகியுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Realme 16 Pro Harry Potter Edition India Launch Set for September 21; Key Specifications, Design Teased