Photo Credit: Sammobile
சாம்சங் தனது கேலக்ஸி எம் 40 ஸ்மார்ட்போனுக்காக ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ஒன் யுஐ 2.0 அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மென்பொருள் பதிப்பான M405FDDU2BTB5 உடன் வருகிறது, இது சமீபத்திய மார்ச் 2020 பாதுகாப்பு இணைப்பையும் கொண்டு வருகிறது. கேலக்ஸி எம் 20 மற்றும் கேலக்ஸி எம் 30-ஐப் போலவே, கேலக்ஸி எம் 40 அப்டேட்டின் “கோர்” பதிப்பையும் பெறும், இது ஒன் யுஐ 2.0-ன் முழு பதிப்பு அல்ல. இதன் பொருள், போனில் ஆண்ட்ராய்டு 10-ன் அனைத்து அடிப்படை அம்சங்களும் இருக்கும், ஆனால் சில கூடுதல் அம்சங்களை இழக்கும்.
Galaxy M40--க்கான அப்டேட் 1.74 ஜிபி அளவு மற்றும் மார்ச் 1 தேதியிட்ட பாதுகாப்பு இணைப்புடன் வருகிறது. இந்த அப்டேட் முழுமையான சேஞ்ச்லாக்கை பட்டியலிடவில்லை என்றாலும், better dark mode, smart replies, improved privacy மற்றும் location controls, Samsung-கிற்கு இடையில் மாறுவதற்கான ஆப்ஷன் மற்றும் Google navigation gestures மற்றும் பிற மாற்றங்களுடன் சிறந்த ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டுகளை போனில் பெறும் என்று சாம்மொபைல் கூறுகிறது. கோர் புதுப்பிப்பாக இருப்பதால், இது உள்ளமைக்கப்பட்ட திரை ரெக்கார்டர் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்காது.
முன்பே ஏற்றப்பட்ட செயலிகளான கால்குலேட்டர், சாம்சங் இன்டர்நெட், சாம்சங் ஹெல்த் மற்றும் சாம்சங் நோட்ஸ் ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளன, ஆனால் OS அப்டேட் முடிந்ததும் பயனர்கள் தனித்தனியாக அப்டேட் செய்ய வேண்டும். நீங்கள் அப்டேட்டை பெற்றுள்ளீர்களா என்பதைச் சரிபார்க்க விரும்பினால், Settings > Software update-க்குச் செல்லாவும். அப்டேட் இருந்தால், பதிவிறக்கத்தைத் தட்டி இன்ஸ்டால் செய்யவும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்