Samsung Galaxy M31s அறிமுகம்... பட்ஜெட் விலையில் சூப்பர் ஸ்மார்ட்போன்..!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 31 ஜூலை 2020 14:17 IST
ஹைலைட்ஸ்
  • பின்பக்கத்தில் எல் வடிவில் நான்கு கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • M31s ஸ்மார்ட்போனில் சோனி IMX682 சென்சாருடன் பிரைமரி கேமரா வருகிறது.
  • 6,000 mAh சக்தி கொண்ட பேட்டரி, 25W சார்ஜர் வழங்கப்பட்டுள்ளன.

கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனில் 6,000 mAh சக்தி கொண்ட பேட்டரி வழங்கப்படுகிறது

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. கண்னைக் கவரும் டிசைனில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்கு காணலாம்.

சாம்சங் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் சாம்சங் கேலக்ஸி M31 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அதன் தொடர்ச்சியாக அதே சீரிஸில் தற்போது புதிதாக கேலக்ஸி M31s என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இது M31 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட  வேரியன்டாக பார்க்கப்பட்டாலும் கூடுதலான சிறப்பம்சங்கள் பல இதில் உள்ளன. 

முதல் விஷயமாக கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனின் தோற்றமே கண்ணைக் கவரும் வகையில், அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. பளபளப்பான கிளாஸ்டிக் டெட்ரியல் கொண்டு பேனல் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது கண்ணாடியும் (Glass) பிளாஸ்டிக்கும் சேர்ந்த கலவையாகும்.

முக்கிய அம்சங்களாக  கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனில் 6,000 mAh சக்தி கொண்ட பேட்டரி, USB டைப் சி கேபிள், 25W சார்ஜர், ரிவர்ஸ் சார்ஜிங் வசதி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராயட்டு 10 இயங்குதளத்தில், ஆக்டாகோர் எக்ஸினோஸ் 9611 SoC பிராசசரில் கேலக்ஸி M31s இயங்குகிறது. இந்த பிராசசர் மட்டும்தான் மற்ற ஸ்மார்ட்போன்களை ஒப்பிடும் போது சற்றுக் குறைவான வேகம் கொண்டதாகும். 

கேமராவைப் பொறுத்தவரையில் இதுவரையில் மற்ற சாம்சங் போன்களில், சாம்சங் சென்சாருடன் கூடிய கேமராதான் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனில் சோனி IMX682 சென்சாருடன் பிரைமரி கேமரா வருகிறது. 

பின்பக்கத்தில் எல் வடிவில் நான்கு கேமராக்கள் (குவாட் கேமரா) வழங்கப்பட்டுள்ளன. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சலுடன் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்புறம், பின்புறம் இரண்டிலும் 4K அளவிலான வீடியோக்கள் எடுக்க முடியும். குறிப்பாக வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் போதே போட்டோவும் எடுக்க முடியும். 

விலை:
கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மாடல் 19,499 ரூபாய் என்றும், 8ஜிபி ரேம் மாடல் 21,499 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் இந்த கேலக்ஸி M31s ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. 


Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent battery life
  • Crisp AMOLED display
  • Bundled fast charger
  • Bad
  • Dated processor
  • Weak low-light camera performance
  • Poor video stabilisation
 
KEY SPECS
Display 6.50-inch
Processor Samsung Exynos 9611
Front Camera 32-megapixel
Rear Camera 64-megapixel + 12-megapixel + 5-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 6000mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.