இந்தியாவில் Samsung Galaxy M31-ன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.15,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Samsung Galaxy M31, பெரிய 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது
Samsung Galaxy M31 இன்று இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வர உள்ளது. இந்த விற்பனை மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியாவில் Samsung Galaxy M31-ன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.15,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.16,999 ஆகும். மேலும், இந்நிறுவனம் ரூ.1,000 கூடுதல் தள்ளுபடியை அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக ரூ.14,999-க்கு வழங்குகிறது. அமேசான் இந்தியா, சாம்சங் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை கடைகள் மூலம் இன்று Galaxy M31 மதியம் 12 மணி முதல் பயனர்களுக்கு கிடைக்கும். கலர் ஆப்ஷன்களில் Ocean Blue மற்றும் Space Black ஆகியவை அடங்கும்.
டூயல்-சிம் (நானோ) Samsung Galaxy M31, 19.5: 9 விகிதத்துடன் உடன் 6.4 அங்குல முழு எச்டி + இன்ஃபினிட்டி-யு சூப்பர் அமோலேட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10-க்கு மேல் ஒரு One UI-ல் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் Exynos 9611 SoC-யால் இயக்கப்படுகிறது, இது 6 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி UFS 2.1 ஸ்டோரேஜ் அடங்கும், இது மைக்ரோ எஸ்டி வழியாக (512 ஜிபி வரை) மேலும் விரிவாக்கம் செய்யலாம். அங்கீகாரத்திற்காக பின்புறத்தில் ஒரு கைரேகை சென்சார் உள்ளது.
Samsung Galaxy M31, குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில், f/1.8 aperture உடன் 64 மெகாபிக்சல் முதன்மை சாம்சங் ISOCELL பிரைட் GW1 சென்சார் அடங்கும். இது f/2.2 aperture உடன் இரண்டாம் நிலை 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா, f/2.4 aperture உடன் 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் f/2.2 aperture உடன் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்களைப் பொறுத்தவரை, முன்புறத்தில் 32 மெகாபிக்சல் கேமரா உள்ளது, இது 4K மற்றும் ஸ்லோ-மோ வீடியோ பதிவை ஆதரிக்கிறது.
Samsung Galaxy M31, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. போனின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும்.
Can Samsung Galaxy M31 beat the Redmi Note 8 Pro, Poco X2? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch