சாம்சங்கின் பட்ஜெட் போனாக அறிமுகமான கேலக்ஸி எம் வரிசை போன்களில் இரண்டு போன்கள் இதுவரை அறிமுகமாகிய நிலையில் தற்போது மூன்றாவது தயாரிப்பான சாம்சங் கேலக்ஸி எம்30 வெளியாகியுள்ளது.
தனது முந்தைய போன்களை போலவே இந்த போனும் ஆன்லைனில் பிரத்யோகமாக வெளியாகவுள்ளது. மூன்று பின்புற கேமராக்கள், அமோலெட் திரை மற்றும் 5,000mAh பேட்டரி பவருடன் வெளியாகியிருக்கும் இந்த சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் சாம்சங் ஆன்லையின் தளத்தில் வரும் மார்ச் 7ஆம் தேதி மதியம் 12 மணி முதல் ரிலீசாகிறது.
சாம்சங் கேலக்ஸி எம்30 விலை பட்டியல்:
இந்தியாவில் வெளியாகியுள்ள சாம்சங் கேலக்ஸி எம்30 ரூபாய் 14,990 முதல் துவங்குகிறது. 4ஜிபி ரேம் மட்டும் 64 ஜிபி சேமிப்பு வசதிகொண்ட இந்த ஸ்மார்ட்போன் எற்கெனவே குறிப்பிட்டது போல் ரூ.14,990க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
அடுத்தபடியான 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதிகொண்டுள்ள வகை ஸ்மார்ட்போன் ரூ.17,990க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும் இன்று வெளியான தகவல்களின் அடிப்படையில் கிரேடியன்ட் பிளாக், கிரேடியன்ட் புளூ போன்ற நிறங்களில் வெளிவரவுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன்களின் அமைப்புகள்:
பல நாட்கள் எதிர்பார்ப்புக்கு பிறகு சாம்சங் கேலக்ஸி எம்30 வெளியாகியுள்ள நிலையில் அதன் அமைப்புகளை பார்ப்போம். இரண்டு சிம்கார்டுகளுக்கான இடம், ஆண்டுராய்டு 9 பைய் வசதியுடன் வெளியாகமல் 8.1 ஓரியோ மென்பொருளுடன் வெளியாகியுள்ளது.
6.4 இஞ்ச் ஹெச்டி திரை, சூப்பர் அமோலெட் இன்ஃபினிட்டி-யூ திரை மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளேவை இந்த சாம்சங் கேலக்ஸி எம்30 கொண்டுள்ளது. வைட்வையின் எல்1 சான்றிதழை இந்த போன் பெற்றுள்ளதால் அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் வீடியோக்களை ஹெச்டி தரத்தில் பார்க்க முடியும்.
மற்ற அமைப்புகளான ஆக்டா கோர் எக்ஸ்னாஸ் 7904 பிராசஸ்சரை கொண்டுள்ளது. கேமரா சென்சார்களை பொருத்தவரை 13 மெகாபிக்சல் ஆர்ஜிபி சென்சார், 5 மெகா பிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 5 மெகா பிக்சல் அல்டிரா வையிட் சென்சார் உள்ளது. முன்புற கேமராக்களை பொருத்தவரை 16 மெகா பிக்சல் செல்ஃபி சென்சாரும் இதில் வெளியாகியுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனின் உள்ளிருக்கும் சேமிப்பு வசதியை பொருத்தவரை 128 ஜிபி இடம்பெற்றுள்ளது.
பேட்டரி வசதி ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளதுபோல் 5000mAh உள்ள நிலையில் கூடுதலாக 15W சார்ஜர் மற்றும் டைப் சி போர்ட் உள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும் பின்புறத்தில் ஃபிங்கர்பிரிண்ட் சென்சாரும் முன்புறத்தில் ஃபேஸ் ஆன்லாக் சென்சார் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்