Galaxy M21 என அழைக்கப்படும் Galaxy M சீரிஸ் மார்ச் 16 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. போனின் வடிவமைப்பைப் பற்றிய காட்சியை எங்களுக்குத் தவிர, Galaxy M21-ன் சில முக்கிய விவரக்குறிப்புகளை சாம்சங் வெளிப்படுத்தியது, அதாவது ஒரு பெரிய 6,000 எம்ஏஎச் பேட்டரி, மூன்று பின்புற கேமராக்கள் மற்றும் ஒரு சூப்பர் அமோலேட் டிஸ்பிளே போன்றவை.
Samsung Galaxy M21 மைக்ரோசைட் ஏற்கனவே அதிகாரப்பூர்வ Samsung India website மற்றும் அமேசானில் நேரலையில் வந்துள்ளது. வடிவமைப்பிலிருந்து தொடங்கி, Galaxy M31-ல் இருந்து ஆழமான நீல வண்ணத் திட்டம், நாட்ச் மற்றும் கைரேகை சென்சாரின் வடிவம் வரை Galaxy M21 உத்வேகம் பெறுகிறது. விளம்பர படங்கள் செங்குத்தாக அடுக்கப்பட்ட மூன்று பின்புற கேமரா அமைப்பை தெளிவாகக் காட்டுகின்றன, அவற்றில் ஒன்று 48 மெகாபிக்சல் பிரதான கேமரா. மற்ற இரண்டு கேமராக்களில் எந்த தகவலும் இல்லை, ஆனால் அவற்றில் ஒன்று பெரும்பாலும் வைட்-ஆங்கிள் ஷூட்டர், மற்றொன்று டெப்த் சென்சாராக இருக்கலாம்.
Galaxy M21 ஆனது சூப்பர் அமோலேட் டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் என்றும் சாம்சங் வெளிப்படுத்தியுள்ளது, இது இன்பினிட்டி-யு வடிவமைப்பு மொழியாகத் தோன்றுகிறது. வாட்டர் டிராப் நாட்சில் 20 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. குறிப்பாக, அமேசான் மற்றும் Samsung இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலுள்ள மைக்ரோசைட், போனின் உள்ளே ஒரு பெரிய 6,000 எம்ஏஎச் பேட்டரி இருப்பதைக் குறிப்பிடுகிறது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டு ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9611 SoC-யால் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. Galaxy M21, ஒன் யுஐ 2.0 உடன் ஆண்ட்ராய்டு 10 இயங்கும் என்றும், இந்த போன் நீலம், கருப்பு மற்றும் வயலட் ஆகிய கலர் ஆப்ஷன்களில் வரும் என்றும் அட்டவணை கூறுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்