Photo Credit: Samsung
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட கேட்ஜெட் எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். செல்போன் தாண்டி மற்ற தொழில்நுட்ப தகவல்களும் உங்களை வந்து சேரும். இப்போ நாம் பார்க்க இருப்பது Samsung Galaxy Unpacked 2025 விழா பற்றி தான்.
Samsung Galaxy Unpacked 2025 இந்த மாத இறுதியில் கலிபோர்னியாவின் சான் ஜோஸில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Galaxy S25 செல்போன் சீரியஸ் பற்றிய அறிமுகமும் இதில் நடக்கிறது. கேலக்ஸி எஸ் 25 சீரிஸ் என்று எங்கும் அறியப்படும் புதிய தலைமுறை கேலக்ஸி எஸ் சீரிஸ் செல்போன்கள் செயற்கை நுண்ணறிவு (AI) அனுபவங்களில் இது ஒரு பெரிய பாய்ச்சலை வழங்கும். இதே போல சாம்சங் இந்தியாவில் போன்களுக்கான முன்பதிவுகளையும் தொடங்கியுள்ளது. முன்பதிவு செய்பவர்கள் சிறப்புப் பலன்களைப் பெறுவார்கள்.
Samsung தனது வரவிருக்கும் Galaxy Unpacked 2025 விழா பற்றிய விவரங்களைப் பகிர்ந்துள்ளது. இது ஜனவரி 22 அன்று காலை 10:30 மணிக்கு கலிபோர்னியாவின் சான் ஜோஸில் நடைபெறும். இந்த நிகழ்வு Samsung.com, Samsung Newsroom மற்றும் அதன் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும். வாடிக்கையாளர்கள் ரூ.1,999 செலுத்தி முன்பதிவு செய்யலாம் என்று நிறுவனம் கூறுகிறது. கேலக்ஸி முன்பதிவு விஐபி பாஸைப் பெற்று அதற்கான பலன்களைப் பெறுங்கள். வரவிருக்கும் Galaxy ஃபோன்களை வாங்கும் போது e-Store வவுச்சர் மூலம் 5,000 சலுகை கிடைக்கும்.
Galaxy Unpacked 2025 விழாவின் போது புதிய கேலக்ஸி எஸ் தொடரை அறிமுகம் செய்வதை சாம்சங் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. முந்தைய மாடல்களை பின்பற்றி, மூன்று மாடல்கள் அறிவிக்கப்படலாம். அது Galaxy S25, ஒரு Galaxy S25+ மற்றும் Galaxy S25 Ultra ஆகும். அனைத்து மாடல்களும் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் SoC மூலம் 12ஜிபி ரேம் தரநிலையாக இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Galaxy S25 மாடலில் 4,000mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. அதே நேரத்தில் Galaxy S25 பிளஸ் மற்றும் Galaxy S25 அல்ட்ரா வகைகளில் முறையே 4,900mAh மற்றும் 5,000mAh பேட்டரி இருக்கும்.
Galaxy S25 செல்போன் சீரியஸ் உடன் 2024 டிசம்பரில் அறிவிக்கப்பட்ட Project Moohan என அழைக்கப்படும் சாம்சங் நிறுவனத்தின் ரியாலிட்டி (XR) ஹெட்செட்டையும் அறிமுகப்படுத்தலாம். இது கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு XR இயங்குதளத்தில் இயங்குகிறது. இது ஆக்மென்ட்டட் ரியாலிட்டியை கொண்டிருக்கும் அம்சங்களை சப்போர்ட் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. (AR ), விர்ச்சுவல் ரியாலிட்டி ( VR ) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள் புதிய Galaxy S25 Slim மாடலில் இருக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்