Photo Credit: Samsung
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட கேட்ஜெட் எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். செல்போன் தாண்டி மற்ற தொழில்நுட்ப தகவல்களும் உங்களை வந்து சேரும். இப்போ நாம் பார்க்க இருப்பது Samsung Galaxy S25, Galaxy S25+, Galaxy S25 Ultra செல்போன்கள் பற்றி தான்.
Samsung Galaxy S25, Galaxy S25+, Galaxy S25 Ultra செல்போன்கள் கேலக்ஸி எஸ் 25 தொடராக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 22ல் அறிமுகபடுத்தப்படும் என கூறப்படுகிறது. Galaxy S25 Ultra வளைந்த விளிம்புகளைக் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாப்-ஆஃப்-லைன் கேலக்ஸி எஸ் மாடல் வட்டமான மூலைகளுடன் வரக்கூடும் என்று சுட்டிக்காட்டி இருக்கிறது.
ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் அறிக்கையின்படி, Galaxy S25 சீரியஸ் செல்போன்கள் Qualcomm நிறுவனத்தின் புதிய Snapdragon 8 Elite SoC மூலம் இயங்கும். 12 ஜிபி ரேம் மூலம் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் இது எல்லா நாடுகளிலும் கிடைக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அனைத்து மாடல்களும் டூயல் சிம் திறன் (இ-சிம்சப்போர்ட்), வைஃபை 7, புளூடூத் 5.3 மற்றும் 12 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா போன்ற அம்சங்களுடன் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் அறிவிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான One UI 7 மூலம் அவை இயங்கும்.
பேஸிக் Galaxy S25 ஆனது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.2-இன்ச் டைனமிக் AMOLED 2X திரையைக் கொண்டுள்ளது. இது மூன்று சேமிப்பக விருப்பங்களில் வழங்கப்படலாம். அவை 128GB, 256GB மற்றும் 512GB. இந்த கைபேசியானது 25W வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான சப்போர்ட் உடன் 4,000mAh பேட்டரியை பேக் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 162 கிராம் எடையுள்ளதாக இருக்கும்.
Galaxy S25+ ஆனது 6.7-இன்ச் டைனமிக் AMOLED 2X திரையுடன் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் பொருத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. 256ஜிபி மற்றும் 512ஜிபி சேமிப்பக மாறுபாடுகள் மட்டுமே வழங்கப்பட வாய்ப்புள்ளது. இது 45W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 4,900எம்ஏஎச் மூலம் இயங்கும்.
Samsung Galaxy S25 Ultra ஆனது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.9-இன்ச் டைனமிக் AMOLED 2X டிஸ்பிளேவைக் கொண்ட மிகப்பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி ஆகிய மூன்று சேமிப்பு வகைகளில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இந்த கைபேசியானது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் 5,000mAh பேட்டரியை கொண்டிருக்கும். இரட்டை 4G VoLTE, 5G, Wi-Fi, GPS, Bluetooth, Glonass, QZSS மற்றும் USB Type-C போர்ட் அகியவை இணைப்பு ஆப்ஷன்கள் ஆகும். இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்