Photo Credit: Oppo
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட கேட்ஜெட் எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். செல்போன் தாண்டி மற்ற தொழில்நுட்ப தகவல்களும் உங்களை வந்து சேரும். இப்போ நாம் பார்க்க இருப்பது Oppo Reno 13F 5G, Reno 13F 4G செல்போன்கள் பற்றி தான்.
Oppo Reno 13F 5G, Reno 13F 4G செல்போன்கள் நவம்பர் 2024ல் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் உலகளவில் வெளியிடப்பட்டன. Oppo Reno 13F வகைகளில் 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா கொண்டுள்ளது. 45W வயர்டு SuperVOOC சார்ஜிங் சப்போர்ட் உடன் 5,800mAh பேட்டரிகளை கொண்டுள்ளது. அவை தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66, IP68 மற்றும் IP69 மதிப்பீடுகளை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
Oppo Reno 13F 5G ஆனது 8GB ரேம் + 128GB மெமரி, 8GB + 256GB, 12GB + 256GB மற்றும் 12GB + 512GB ஆகிய ஆப்ஷன்களில் கிடைக்கிறது. Oppo Reno 13F 4G மாடல் 8GB ரேம் + 256GB மெமரி மற்றும் 8GB + 512GB விருப்பங்களில் கிடைக்கும் என்பது தெரியவந்துள்ளது. உலக சந்தைகளில் Oppo Reno 13 சீரிஸ் செல்போன்களின் விலை விவரங்களை Oppo இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும், APAC (ஆசியா-பசிபிக்) பிராந்தியத்தில் இந்த செல்போன்கள் படிப்படியாக வெளிவரத் தொடங்கும் என்பதை உறுதிப்படுத்தியது. இரண்டு Oppo Reno 13F மாடல்களும் கிராஃபைட் கிரே மற்றும் ப்ளூம் பர்பில் வண்ணங்களில் வருகிறது. 5G மாடல் மட்டும் ஒளிரும் நீல நிறத்தில் வருகிறது, அதே நேரத்தில் 4G மாடல் ஸ்கைலைன் ப்ளூ விருப்பத்தில் வருகிறது. Oppo Reno 13 மற்றும் Reno 13 Pro இந்தியாவில் ஜனவரி 9 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. Reno 13F செல்போன்கள் இந்தியாவில் கிடைக்குமா என்பது குறித்து நிறுவனத்திடம் இருந்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
Oppo Reno 13 மற்றும் Reno 13 Pro ஆகிய இரண்டும் கண்ணாடி பின் பேனல்கள், OLED திரைகள் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i டிஸ்ப்ளே பாதுகாப்பைப் பெறுகின்றன. அடிப்படை மாடல் 1.81 மிமீ மெல்லிய அளவு மற்றும் 93.4 சதவீத டிஸ்பிளே பாடி விகிதத்தைக் கொண்டுள்ளது. ப்ரோ வேரியண்டில் 1.62மிமீ பெசல் மற்றும் 93.8 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ இருக்கும். இது MediaTek Dimensity 8350 சிப்செட்களால் இயக்கப்படுகின்றன. ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான ColourOS 15 உடன் அனுப்பப்படுகின்றன. 80W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஆதரவுடன் 5,600mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்