Samsung Galaxy S26 சீரிஸில், விலை கட்டுப்பாட்டிற்காக கேமரா ஹார்டுவேர் மேம்பாடுகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக கொரிய ரிப்போர்ட் தெரிவிக்கிறது
Photo Credit: Samsung
Samsung Galaxy S26-ல் கேமரா அப்கிரேடை தவிர்த்ததற்கான காரணம், விலை கட்டுப்பாடு குறித்த நிறுவனத்தின் திட்டம், Apple-ன் தாக்கம் மற்றும் புதிய அம்சங்கள் (Exynos 2600, Qi2 சார்ஜிங்) குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்
பட்ஜெட் 5G மார்க்கெட்டுல Realme-க்குன்னு ஒரு பெரிய ஃபேன்ஸ் கூட்டம் இருக்கு! இப்போ அவங்களுடைய அடுத்த மாஸ் சீரிஸ் ஆன Realme Narzo 90 Series லான்ச்சுக்கு ரெடியாஸ்மார்ட்போன் மார்க்கெட்டுல ஒவ்வொரு வருஷமும் ஒரு புது புரட்சியைச் செய்ற Samsung, இப்போ அடுத்த வருஷம் வரப்போகிற Samsung Galaxy S26 சீரிஸ் பத்தி ஒரு முக்கியமான முடிவை எடுத்திருக்காங்க! இந்த முடிவு, சிலருக்கு சந்தோஷத்தையும், பலருக்கு ஏமாற்றத்தையும் கொடுக்கலாம். Samsung நிறுவனம் தன்னுடைய Galaxy S26 (பேஸ் மாடல்) மற்றும் Galaxy S26 Plus மாடல்கள்ல, இந்த வருஷம் கேமரா ஹார்டுவேரை மேம்படுத்த வேண்டாம்னு முடிவெடுத்திருக்காங்க! ஆமாங்க! லேட்டஸ்ட் ரிப்போர்ட்டுகள் படி, S26 சீரிஸ்ல, S25 சீரிஸ்ல இருந்த அதே கேமரா செட்டப் தான் இருக்கப் போகுதாம்.
● 50MP மெயின் கேமரா
● 12MP அல்ட்ரா-வைட் கேமரா
● 10MP 3x ஆப்டிகல் ஜூம் டெலிஃபோட்டோ கேமரா
● முன்பக்கத்துல 12MP செல்ஃபி கேமரா
இதே செட்டப்பைத்தான் Samsung கடந்த சில வருஷங்களா பயன்படுத்தி வராங்க. அப்போ ஏன் இந்த முடிவை எடுத்தாங்க?
இதற்கு முக்கிய காரணம், விலை கட்டுப்பாடு (Price Control) தான்! இப்போ மார்க்கெட்டுல போன் தயாரிப்புக்கான பாகங்களின் விலை, குறிப்பா RAM மற்றும் ஸ்டோரேஜ் சிப்களின் விலை ரொம்ப அதிகரிச்சிருக்கு. இந்த விலையேற்றத்தால, புது கேமரா ஹார்டுவேரையும் சேர்த்துப் போட்டா, போனின் சில்லறை விற்பனை விலையை (Retail Price) உயர்த்த வேண்டியிருக்கும்னு Samsung பயப்படுறாங்க.
Apple-ன் தாக்கம்: சமீபத்துல Apple நிறுவனம் தன்னுடைய iPhone 17 பேஸ் மாடலை லான்ச் பண்ணும்போது, 120Hz டிஸ்பிளே மற்றும் அதிக ஸ்டோரேஜ் போன்ற அம்சங்களை அப்கிரேட் பண்ணியும், விலையை உயர்த்தாமல் பார்த்துகிட்டாங்க. இது Samsung-ஐ ரொம்ப பாதிச்சிருக்கு. Apple விலையை உயர்த்தாததால, சாம்சங்கும் விலையை உயர்த்தாமல் இருக்கணும்னு நினைச்சு, கேமரா அப்கிரேடை தியாகம் செஞ்சிருக்காங்க!
சோ, கேமரா ஹார்டுவேரில் முன்னேற்றம் இல்லாவிட்டாலும், இமேஜ் குவாலிட்டி மேம்படுமான்னு கேட்டா, சாஃப்ட்வேர் மற்றும் புதிய Exynos 2600 சிப்செட் மூலமா கொஞ்சம் முன்னேற்றம் இருக்கும்னு எதிர்பார்க்கலாம். இந்த கடைசி நேர முடிவால, Galaxy S26 மற்றும் S26 Plus மாடல்களின் உற்பத்தித் திட்டத்துல மாற்றம் ஏற்பட்டிருக்கு. இதனால, வழக்கம் போல ஜனவரி மாசம் லான்ச் ஆகாம, பிப்ரவரி 2026-க்கு லான்ச் தள்ளிப் போகலாம்னு கூட சொல்லியிருக்காங்க. ஆனா, ஒரு நல்ல செய்தி என்னன்னா, இந்த சீரிஸ்ல Qi2 மேக்னடிக் வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டாண்டர்ட்டை Samsung முழுசா கொண்டு வரப் போறாங்க! இதன் மூலமா, 25W வரை ஃபாஸ்ட்டான வயர்லெஸ் சார்ஜிங்கை எதிர்பார்க்கலாம். மொத்தத்துல, Samsung Galaxy S26 கேமரா அப்கிரேடை மிஸ் பண்ணாலும், விலையை கட்டுக்குள் வச்சு, மற்ற புதிய அம்சங்களோட மார்க்கெட்ட ஜெயிக்கப் பார்க்குறாங்க! இந்த முடிவு பத்தி உங்க கருத்து என்னன்னு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Uranus and Neptune May Be Rocky Worlds Not Ice Giants, New Research Shows
Steal OTT Release Date: When and Where to Watch Sophie Turner Starrer Movie Online?
Murder Report (2025): A Dark Korean Crime Thriller Now Streaming on Prime Video
12A Railway Colony Now Streaming on Amazon Prime Video: What You Need to Know