Samsung Galaxy S26 Edge ஸ்மார்ட்போன் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தென் கொரிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன
Samsung Galaxy S25 Edge, Galaxy chip-க்கான தனிப்பயன் Snapdragon 8 Elite-ல் இயங்குகிறது
Samsung ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான தகவல்! Galaxy S சீரிஸ்-ல வர்ற வருஷம் (2026) ஒரு பெரிய மாற்றம் இருக்கப் போகுதுன்னு இப்போ தகவல் வந்திருக்கு. சில மாசங்களுக்கு முன்னாடி, Samsung ரொம்ப மெலிசான ஒரு ஃபிளாக்ஷிப் போனை அறிமுகப்படுத்தியிருந்தாங்க. அதுதான் Samsung Galaxy S25 Edge. வெறும் 5.8mm தடிமன் கொண்ட இந்த போன், Apple-இன் iPhone Air-க்கு போட்டியா கொண்டு வரப்பட்டது. ஆனா, இப்போ வந்திருக்கிற தகவல்கள் அதிர்ச்சி கொடுக்கிற மாதிரி இருக்கு.
அடுத்த வருஷம் வரப்போகிற Samsung Galaxy S26 Edge மாடல் கைவிடப்பட்டுவிட்டது! சவுத் கொரியன் மீடியாக்கள் வெளியிட்டிருக்கிற தகவல் படி, Galaxy S25 Edge மாடலின் விற்பனை ரொம்பவும் மோசமா இருந்ததால, Samsung இந்த அல்ட்ரா-ஸ்லிம் போன் சீரிஸை நிரந்தரமா நிறுத்திட்டாங்க.எப்படி இவ்வளவு பெரிய முடிவு எடுத்தாங்கன்னு பார்த்தா, S25 Edge-ஓட விற்பனை வெறும் 1.31 மில்லியன் யூனிட்கள் மட்டும்தான் விற்றிருக்கு. ஆனா, மற்ற மாடல்கள் (S25, S25 Plus, S25 Ultra) எல்லாம் பன்மடங்கு அதிகமா விற்றிருக்கு. மெலிசான போன் வேணும்னு கஸ்டமர்கள் ஆசைப்பட்டாலும், குறைவான பேட்டரி பவர் (3,900mAh) மற்றும் டெலிஃபோட்டோ கேமரா இல்லாதது போன்ற முக்கியமான அம்சங்களை இழக்க அவங்க தயாராக இல்லைன்னு இப்போ தெரிய வந்திருக்கு.
இந்த முடிவுனால, போன வருஷம் நிறுத்தப்படலாம்னு பேசப்பட்ட Galaxy S26 Plus மாடல் இப்போ மீண்டும் உயிர் பெற்றுள்ளது! 2026-ல வரப்போகும் Galaxy S சீரிஸ் இனி வழக்கம்போல மூன்று மாடல்களை மட்டுமே கொண்டிருக்கும்.
பேஸ் மற்றும் பிளஸ் மாடல்கள்ல Samsung-இன் Exynos 2600 சிப் இருக்கலாம். ஆனா Galaxy S26 Ultra மாடல்ல மட்டும் வழக்கம் போல Qualcomm-இன் Snapdragon 8 Elite Gen 5 சிப் வர வாய்ப்பு இருக்கு. Galaxy S25 Edge-இன் டெவலப்மென்ட் முடிஞ்சிருந்தாலும், அதை இப்போதைக்கு வெளியிடப் போறதில்லைன்னு Samsung ஊழியர்களிடம் சொல்லியிருக்காங்க. அல்ட்ரா-ஸ்லிம் போன் ட்ரெண்ட் இப்போதைக்கு முடிவுக்கு வந்துருச்சுன்னு Samsung நம்புறாங்க. மொத்தத்துல, அடுத்த வருஷம் Samsung-இன் ஃபிளாக்ஷிப் மாடல்கள் அதிக சிறப்பம்சங்கள், பெரிய பேட்டரி மற்றும் கன்ஃபார்மான டிசைனோட வரும்னு நம்பலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்