Samsung Galaxy S24 FE விலை பற்றிய தகவல் ஆன்லைனில் கசிந்துள்ளது.
Photo Credit: Samsung
Samsung Galaxy S24 FE is expected to succeed the Galaxy S23 FE
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Samsung Galaxy S24 FE செல்போன் பற்றி தான்.
Samsung Galaxy S24 FE விலை பற்றிய தகவல் ஆன்லைனில் கசிந்துள்ளது. Galaxy S23 FE மாடலை விட அதிக விலையில் விற்பனையாகும் என தெரியவந்துள்ளது.
128GB மெமரி மாடல் ரூ. 54,200ல் தொடங்கும், 256GB மாடல் ரூ. 59,200ல் தொடங்கும் என தெரிகிறது.
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டே அதிரும்படி Samsung Galaxy S24 FE சீரியஸ் போன்களின் ப்ரீ-புக்கிங் அதிகரித்துள்ளது. அந்த வகையில் விற்பனையில் சக்கைபோடு போட்ட சாம்சங் கேலக்ஸி மாடலின் S24 FE எடிசன் விரைவில் வெளியாக இருக்கிறது. பல எதிர்பாராத அம்சங்கள் Samsung Galaxy S24 FE மாடலில் இருக்கிறது. FE என்றால் Fan Editition என்று சொல்கின்றனர். கேமிங் மற்றும் வீடியோ எடிட்டிங் செய்ய செய்ய செம்ம மாஸ்சாக இருக்கும்.
இந்தியாவில் Samsung Galaxy S24 FE மாடல் ரூபாய் 59,999க்கு அறிமுகம் ஆகும் என தெரிகிறது. 8 ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6.65 இன்ச் அளவிலான அமோஎல்இடி டிஸ்பிளே இருக்கலாம். பவர்புலான Snapdragon 8 Gen 3 சிப்செட் இருப்பதால் கேமிங், வீடியோ எடிட்டிங் என அனைத்து பயன்பாட்டுக்கும் உதவிகரமாக இருக்கும்.
இதுதவிர, Samsung Galaxy S24 FE வேரியண்ட் Exynos 2400 SoC சிப் மூலம் இயங்கும் என தெரிகிறது. இதனால் வேகம் பக்காவாக இருக்கும். சாம்சங் கேலக்ஸி S23 FE மாடலில் உள்ளதை போலவே 4500 எம்ஏஎச் பேட்டரி இருக்கலாம் என தெரிகிறது. இது ஒருநாள் முழுக்க தாக்குபிடிக்க உதவும். கேமராக்கள் வடிவமைப்பு மற்றும் கலர் ஆப்ஷன்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
கூடுதலாக டிரிபிள் ரியர் கேமரா யூனிட், அதில் OIS எனப்படும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. 50 மெகாபிக்சல் மெயின் கேமரா, 12 எம்பி அல்ட்ராவைடு ஷூட்டர், 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா, முன்பக்கத்தில் 10 மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார் உள்ளது.
வெளிப்புற பட்டன்களை பொறுத்தவரையில் வழக்கம் போல வலது பக்கம் வால்யூம் பட்டன்கள் மற்றும் பவர் கீ இருக்கிறது. அதே சமயம் கீழ் பேனலில் USB Type C போர்ட் மற்றும் சிம் ட்ரே ஸ்லாட் இருப்பது போல் தெரிகிறது. இடது பக்கம் எந்த டிசைனும் இருப்பது போல தெரியவில்லை. ஆகமொத்தத்தில் செல்போன் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய இந்த Samsung Galaxy S24 FE விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale