இந்தியாவில் Samsung Galaxy S10 Lite வெளியீடு இன்று மதியம் 12 மணிக்கு நேரடி வெப்காஸ்ட் மூலம் நடைபெறும். Samsung Galaxy S10 Lite-ன் விலை ரூ. 40,000-யாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Samsung Galaxy S10 Lite என்பது அசல் Galaxy S10-ன் டன் டவுன் வேரியண்டாகும்
Samsung Galaxy S10 Lite இன்று இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இந்த வெளியீடு சாம்சங்கின் சமூக ஊடக சேனல்கள் மூலம் வெப்காஸ்டில் நடைபெறும். நினைவுகூர, Samsung Galaxy S10 Lite இந்த மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் Samsung Galaxy S10 ஃபிளாக்ஷிப்பின் டன் டவுன் பதிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. Galaxy Note 10 Lite-க்குப் பிறகு இந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன், Samsung Galaxy S10 Lite ஆகும்.
இந்தியாவில் Samsung Galaxy S10 Lite வெளியீடு இன்று மதியம் 12 மணிக்கு நேரடி வெப்காஸ்ட் மூலம் நடைபெறும். சாம்சங் தனது சமூக ஊடக சேனல்கள் மூலம் பேஸ்புக், யூடியூப் மற்றும் பிளிப்கார்ட் உள்ளிட்ட வலைத்தளங்களை இந்த மாத தொடக்கத்தில் Samsung Galaxy S10 Lite-ஐ இந்தியாவில் கேலி செய்தது. இதேபோல், சாம்சங் இந்தியா வலைத்தளம் ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களைக் காண்பிக்கும் ஒரு பிரத்யேக மைக்ரோசைட்டை உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் Samsung Galaxy S10 Lite-ன் விலை இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், சமீபத்திய கேலக்ஸி-சீரிஸ் போன் நாட்டில் ரூ. 40,000 - ரூ. 45,000 இடையிலான விலைக் குறியீட்டுன் விற்பனைக்கு வரும் என்று வதந்திகள் பரிந்துரைக்கின்றன. ஒற்றை வேரியண்டில் உள்ள போன், துல்லியமாக ரூ. 39,999-க்கு விற்பனைக்கு வரும் மற்றும் பிப்ரவரி முதல் வாரத்தில் வாங்குவதற்கு கிடைக்கும். சொல்லப்போனால், Galaxy S10 Lite-ன் விலையைப் புரிந்து கொள்ள முறையான வெளியீடு வரை காத்திருக்க வேண்டும்.
டூயல்-சிம் (நானோ)Samsung Galaxy S10 Lite, One UI 2.0 அடிப்படியிலான Android 10-ல் இயங்குகிறது. இது 20:9 aspect ratio உடன் 6.7-inch full-HD+ (1080 x 2400 pixels) Infinity-O Super AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த போன் 6GB மற்றும் 8GB RAM ஆப்ஷனுடன் இணைக்கப்பட்டு, octa-core Qualcomm Snapdragon 855 SoC-யால் இயக்கப்படுகிறது.
Samsung, இந்த போனில், 48-megapixel முதன்மை சென்சார், ultra-wide-angle lens உடந் 12-megapixel இரண்டாம் நிலை சென்சார் மற்றும் f/2.4 lens உடன் 5-megapixel சென்சார் அடங்கிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை வழங்குகிறது. இதில், f/2.4 lens கொண்ட macro lens உடன் 5-megapixel செல்ஃபி கேமராவும் உள்ளது.
Galaxy S10 Lite, 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதனை microSD card வழியாக (1TB வரை) விரிவாக்கம் செய்யலாம். போனின் இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போன் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. தவிர, இந்த போன் in-display fingerprint சென்சாரையும் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features