Samsung Galaxy Note 10 Lite, பின்புறத்தில் மூன்று 12-megapixel image மற்றும் 32-megapixel செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. இந்த போன் in-display fingerprint ஸ்கேனரை பேக் செய்கிறது.
Samsung Galaxy Note 10 Lite, 10nm Exynos 9810 octa-core SoC-யால் இயக்கப்படுகிறது
Samsung Galaxy Note 10 Lite இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த போன் ஏற்கனவே நமக்குத் தெரிந்தபடி, கடந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட Galaxy Note 10-ன் toned down பதிப்பாகும்.
இந்தியாவில் Samsung Galaxy Note 10 Lite-ன் 6GB + 128GB மாடலின் விலை ரூ. 38,999-யாகவும், அதன் 8GB + 128GB மாடலின் விலை ரூ. 40,999-யாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த Samsung போன் Aura Glow, Aura Black மற்றும் Aura Red கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். முன்பதிவு இன்று மதியம் 2 மணிக்கு திறக்கப்படுகிறது. இது பிப்ரவரி 3 முதல் அனைத்து முக்கிய ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் வழியாக விற்பனைக்கு வரும்.
டூயல்-சிம் (நானோ) Samsung Galaxy Note 10 Lite, 20:9 aspect ratio மற்றும் pixel density of 394ppi உடன் 6.7-inch Full HD+ (1080 x 2400 pixels) Infinity-O Super AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் 6GB மற்றும் 8GB RAM உடன் இணைக்கப்பட்டு 2.7GHz Exynos 9810 octa-core SoC-யால் இயக்கப்படுகிறது. இது 128GB இண்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதனை microSD card வழியாக (1TB வரை) விரிவாக்கம் செய்யலாம்.
கேமராக்களை பொறுத்தவரை, Galaxy Note 10 Lite-ன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு Dual Pixel autofocus, f/1.7 lens மற்றும் OIS உடன் 12-megapixel பிரதான கேமராவைக் கொண்டுள்ளது. இதற்கு f/2.2 aperture உடன் 12-megapixel wide-angle கேமரா மற்றும் f/2.4 aperture மற்றும் stabilisation-க்கு OIS உடன் 12-megapixel telephoto lens ஆகியவை உதவுகிறது. செல்ஃபி மற்றும் வீடியோ காலுக்காக, முன்புறத்தில் f/2.2 aperture உடன் 32-megapixel கேமராவைக் கொண்டுள்ளது.
Galaxy Note 10 Lite சூப்பர்-ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 4,500mAh பேட்டரி பொருத்தப்பட்டு வருகிறது. இந்த போன் in-display fingerprint ஸ்கேனரைக் கொண்டுள்ளது மற்றும் S Pen stylus built-in உடன் வருகிறது. இந்த stylus, Bluetooth Low-Energy (BLE standard)-ஐ அதரிக்கிறது. மேலும், வழக்கமான தொகுப்புகளின் அம்சங்களான multimedia control, clicking a picture மற்றும் Air Commands ஆகியவற்றுடன் வருகிறது. இந்த போன் 76.1 x 163.7 x 8.7mm அளவீடையும், 199 கிராம் எடையையும் கொண்டதாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Astronomers Observe Star’s Wobbling Orbit, Confirming Einstein’s Frame-Dragging
Chandra’s New X-Ray Mapping Exposes the Invisible Engines Powering Galaxy Clusters