Samsung, Galaxy Note 10 Lite மற்றும் Galaxy S10 Lite ஆகியவற்றை ஒன்றாக அறிமுகப்படுத்தக்கூடும்
Samsung Galaxy Note 10 Lite விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Galaxy S10 Lite உடன் Samsung Galaxy Note 10 Lite கடந்த வாரம் உலகளவில் வெளியிடப்பட்டது. இப்போது, இந்திய சில்லறை விற்பனையாளர் விஜய் சேல்ஸ் இணையதளத்தில் வரவிருக்கும் போனைப் பற்றி பேனர் வெளியிடப்பட்டுள்ளது. Samsung Galaxy Note 10 Lite விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது Galaxy Note 10 ஸ்மார்ட்போனின் watered-down பதிப்பாகும். இது மலிவு விலையில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் Galaxy Note 10 Lite-ன் விலையும் சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல இந்திய சில்லறை விற்பனையாளர் விஜய் சேல்ஸ் முகப்புப்பக்கத்தில் பேனரைக் கண்டோம். ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீடு உண்மையில் அருகில் உள்ளது என்பதை இது குறிக்கிறது. சமீபத்திய அறிக்கைகளின் அடிப்படையில், இந்தியாவில் Samsung Galaxy Note 10 Lite-ன் ஆரம்ப விலை ரூ. 35,990-யாக அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் Galaxy Note 10-ஐப் போலவே S Pen stylus-ம், பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது.
Galaxy Note 10-ல் உள்ளதைப் போலவே Samsung Galaxy Note 10 Lite-ம் டிஸ்ப்ளேவின் மையத்தில் punch hole உடன் ஒரு hole-punch டிஸ்ப்ளே உள்ளது. Samsung, இந்த ஸ்மார்ட்போனை 6GB RAM மற்றும் 8GB RAM என இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஸ்டோரேஜ் 128GB உள்ளது. அடிப்படை வேரியண்ட் ரூ. 35,990-யாகவும், உயர் வேரியண்டின் விலை ரூ. 39.990-யாகவும் விலையிடப்பட்டுள்ளது. இதற்கு மாறாக, இந்தியாவில் Samsung Galaxy Note 10-ன் விலை ரூ. 69,999 ஆகும்.
Samsung Galaxy Note 10 Lite சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 6.7-inch full-HD+ Infinity-O Super AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது என்பதை அறிவோம். இந்த போன் Bluetooth Low-Energy standard வழியாக செயல்படும் stylus உடன் வருகிறது. இது சர்வதேச அளவில் 10nm octa-core Exynos 9810 SoC-யால் இயக்கப்படுகிறது. ஆனால், சிப்செட் வெவ்வேறு சந்தைகளில் மாறுபடும். Galaxy Note 10 Lite பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பையும் 32-megapixel selfie shooter-ஐயும் கொண்டுள்ளது. இது ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது in-display fingerprint ஸ்கேனரையும் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy S25 Gets New Galaxy AI Features From Galaxy S26 With New One UI 8.5 Update
Ubisoft Shuts Down 2 More Studios, Lays Off Up to 380 Employees in Latest Round of Cost Cuts