5000 mAh பேட்டரி கொண்ட ‘சாம்சங் கேலக்ஸி M40’..!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 24 ஏப்ரல் 2019 13:20 IST
ஹைலைட்ஸ்
  • Samsung Galaxy M40 is tipped to have 128GB of storage
  • The phone is also rumoured to be the first with Android Pie
  • Samsung launched its Galaxy M series in India in January

கடந்த ஜனவரி மாதம் M வரிசை போன்களை இந்திய சந்தைக்குக் கொண்டு வந்தது சாம்சங்

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் போனாக வெளிவரவிருக்கிறது கேலக்ஸி M40. இந்த போனில் 5000 எம்.ஏ.எச் பேட்டரி, 128 ஜிபி சேமிப்பு வசதிகள் போன்றவை இருக்கும் என்று தகவல் கசிந்துள்ளது. அதேபோல M வரிசை போன்களில் இந்த போன்தான் முதன்முதலாக ஆண்ட்ராய்டு பைய் இயங்கு மென்பொருள் கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. M வரிசையில் சாம்சங் இதுவரை கேலக்ஸி M10, M20 மற்றும் M30 உள்ளிட்ட ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுள்ளது. 

சாம்மொபைல் என்ற தளம் வெளியிட்டு தகவல்படி, சாம்சங் கேலக்ஸி M40-யில், 128 ஜிபி சேமிப்பு வசதி, ஆண்ட்ராய்டு பைஐ மென்பொருள், 5000 எம்.ஏ.எச் பேட்டரி வசதி, ஆமோலெட் டிஸ்ப்ளே, முன்று பின்புற கேமரா உள்ளிட்ட அம்சங்கள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

வை-ஃபை அலையன்ஸ் இணையதளத்தில் M40 குறித்து சென்ற வாரம் முதன்முதலாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை சாம்சங் நிறுவனம், M40 குறித்து எந்த வித தகவலையும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை. 

கடந்த ஜனவரி மாதம் M வரிசை போன்களை இந்திய சந்தைக்குக் கொண்டு வந்தது சாம்சங். கேலக்ஸி M10- 7,990 ரூபாய்க்கும், கேலக்ஸி M20- 10,999 ரூபாய்க்கும், கேலக்ஸி M30- 14,990 ரூபாய்க்கும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது சாம்சங். இதில் M30 மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Samsung Galaxy M40 specifications, Samsung Galaxy M40, Samsung
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஒப்போ ரெனோ 16 இந்திய அறிமுகம்; புதிய ஹெட்செட், பப்பிள் அசிஸரியுடன் வரக்கூடும்
  2. இந்தியாவில் ரூ. 15,000-க்கு கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள்: மோட்டோ G37 பவர் முதல் போகோ C85 மற்றும் பல
  3. சென்ஹைசர் HD 480 ப்ரோ பிளஸ் விமர்சனம்: அமைதியாகக் கவரும் திறமை
  4. வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய புதிய ஐஓஎஸ் (iOS) மற்றும் ஆண்ட்ராய்டு அம்சங்கள்
  5. ஜியோ AI கால் ஏஜென்ட் விளக்கம்: இது என்ன, எப்படி வேலை செய்கிறது, இதன் அம்சங்கள் மற்றும் பல
  6. டால்பி அட்மாஸ், 50W ஸ்பீக்கர்களுடன் ஹேயர் HQLED P7 புரோ ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் அறிமுகம்
  7. சாம்சங் கேலக்ஸி M47 5G இந்திய அறிமுகம் டீஸ் செய்யப்பட்டது, அமேசானில் உள்ள மைக்ரோசைட் வடிவமைப்பை உணர்த்துகிறது
  8. 50MP கேமராவுடன் ரெட்மி டர்போ 5 இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை சலுகைகள்
  9. ஒப்போ ரெனோ 16 உடன் ரெனோ 16c மாடலும் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பு: விவரக்குறிப்புகள் கசிந்தன
  10. 6,500mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 SoC உடன் விவோ Y6e 5G அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.