இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம் 21-ன் விலை குறைப்பு! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 4 மே 2020 10:37 IST
ஹைலைட்ஸ்
  • சாம்சங் கேலக்ஸி எம் 21 விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது
  • இந்த போனை இப்போது ரூ.13,199-க்கு வாங்கலாம்
  • இந்த போன் 6,000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது

சாம்சங் கேலக்ஸி எம் 21 6,000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது

Samsung கேலக்ஸி எம் 21-ன் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போனின் தற்போதைய ஆரம்ப விலை ரூ.13,199-ஆகும். சமீபத்தில், மொபைல் போன்களில் ஜிஎஸ்டி விகிதம் உயர்த்தப்பட்டதன் காரணமாக, சாம்சங் தனது ஸ்மார்ட்போனின் விலையை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. இந்த போன் மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


ஸ்மார்ட்போனின் விலை:
 

இந்தியாவில் சாம்சங் Galaxy M21-ன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.13,499-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜிஎஸ்டி உயர்வுக்கு பின் ரூ.14,222-யாக அதிகரித்தது.
தற்போது விலை ரூ.13,199-யாக குறைக்கப்பட்டுள்ளது.  

போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.15,499-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 
ஜிஎஸ்டி உயர்வுக்கு பின் ரூ.16,499-யாக அதிகரித்தது. 
இந்த வேரியண்டின் தற்போதைய விலை அறிமுக விலையில் மாற்றமின்றி ரூ.15,499-யாக உள்ளது.

ஸ்மார்ட்போனின் விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி எம் 21 ஆண்ட்ராய்டு 10 உடன் ஒன் யுஐ 2.0-ல் இயங்குகிறது. இது 6.4 அங்குல முழு எச்டி + (1080x2340 பிக்சல்கள்) இன்ஃபினிட்டி யு சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. போனில் மாலி-ஜி 72 எம்பி 3 ஜி.பீ.யு ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9611 செயலி உள்ளது. இதில் 6 ஜிபி ரேம் வரை இணைக்கப்பட்டுள்ளது. 

போனின் மூன்று பின்புற கேமரா அமைப்பில், 48 மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை உள்ளன். போனில் 20 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. இந்த போன்128 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இந்த போனில் 15 W ஃபாஸ்ட் சார்ஜிங்கை உதவியுடன் 6,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Crisp AMOLED display
  • Very good battery life
  • Decent performance
  • Bad
  • Spammy notifications
  • Below-average camera performance
  • Charging takes a long time
 
KEY SPECS
Display 6.40-inch
Processor Samsung Exynos 9611
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 6000mAh
OS Android 10
Resolution 2340x1080 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Samsung Galaxy M21, Samsung, Samsung Galaxy M21 Price in India
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஜூன் 2026: இந்தியாவில் அறிமுகமான மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ+, சாம்சங் ஏ27 5ஜி மற்றும் பிற புதிய ஸ்மார்ட்போன்கள்
  2. ஐபோன் 18 சீரிஸ் விலை உயர்வு முந்தைய கணிப்புகளை விடக் குறைவாக இருக்கும்!
  3. சாம்சங் கேலக்ஸி A27 5G அறிமுகம்: ஸ்னாப்டிராகன் சிப், 6.7-இன்ச் திரை மற்றும் சலுகைகள்!
  4. ஆப்பிள் விலை உயர்வு: மேக், ஐபேட் விலை அதிகரிப்பு, ஐபோன்களுக்கு விலக்கு
  5. Oppo Reno 16 முதல் பார்வைகள் (First Impressions)
  6. ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 4 இந்தியாவில் அறிமுகம்: 52dB ANC மற்றும் 54 மணிநேர பேட்டரி லைஃப்
  7. லாவா ஸ்மார்ட் 4 பிளஸ் 5,000mAh பேட்டரி, 6.75-இன்ச் டிஸ்ப்ளேவுடன் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  8. வாட்ஸ்அப் நிறுவனம் தெரியாத எண்களிலிருந்து வரும் அரட்டைகள் (Chats) குறித்து பயனர்களை எச்சரிக்கத் தொடங்கியுள்ளது
  9. அமேசான் இந்தியாவின் விரைவு வர்த்தகம் 300 நகரங்களுக்கு விரிவாக்கம்; பணியாளர்களுக்கு புதிய நலத்திட்டம் அறிமுகம்!
  10. அசுஸ் ROG கேமிங், ப்ரோஆர்ட் லேப்டாப்கள் ரூ.1.99 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தன!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.