Samsung Galaxy Fold, 1 மில்லியன் யூனிட்டுகள் விற்பனை அடைந்துள்ளது என்று தென் கொரிய நிறுவனம் தெரிவித்துள்ளது. Samsung Galaxy Fold, MWC 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், ஆரம்பகால விமர்சகர்கள், டிஸ்பிளேவின் சிக்கல்களை எதிர்கொள்ளத் தொடங்கிய பின்னர் சர்ச்சையில் சிக்கியது. உடையக்கூடிய foldable டிஸ்பிளே விமர்சகர்களின் கைகளில் உடைந்து கொண்டிருந்தது. எனவே, சாம்சங், போனின் வடிவமைப்பை சேதப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைக்க, மீண்டும் வேலை செய்ய கட்டாயப்படுத்தியது. செப்டம்பர் மாதத்தில் இந்த போன் மீண்டும் வெளியிடப்பட்டது, மேலும் சமீபத்திய விற்பனை புள்ளிவிவரம் டெக் க்ரஞ்சின் டிஸ்ரப்ட் பெர்லின் (TechCrunch's Disrupt Berlin) நிகழ்வில் அறிவிக்கப்பட்டது.
அக்டோபரில், இதன் விற்பனை 5,00,000 யூனிட்டுகளில் இருந்ததாகக் கூறப்படுகிறது, அதாவது நிறுவனம் ஒரு மாதத்திற்கும் மேலாக அதே தொகையை விற்க முடிந்தது. சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தலைவர் யங் சோன் (Young Sohn), Samsung Galaxy Fold-ன் 1 மில்லியன் யூனிட்டுகளை விற்க முடிந்தது என்று ஒரு நிகழ்வில் தெரிவித்தார். ஆரம்ப விற்பனைக்கு பிறகு இந்த எண்ணிக்கை பாராட்டத்தக்கது, குறிப்பாக $1,980 (சுமார் ரூ. 1,41,700, இந்தியாவில் இருந்தாலும், இதன் விலை ரூ. 1,64,999). "நான் நினைக்கிறேன், இந்த தயாரிப்புகளில் ஒரு மில்லியனை நாங்கள் விற்பனை செய்கிறோம். இந்த தயாரிப்பை $ 2,000-க்கு மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்த விரும்புகிறார்கள்”, என்று சோன் (Sohn) நிகழ்வில் கூறினார் என்று டெக் க்ரஞ்ச் (TechCrunch) தெரிவித்துள்ளது.
சாம்சங் ஏற்கனவே தனது அடுத்த Galaxy Fold சாதனத்தில் செயல்பட்டு வருவதாகவும், பிப்ரவரி 18-ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் திறக்கப்படாத நிகழ்வில் இதை அறிமுகப்படுத்துவதாகவும் வதந்தி பரவியுள்ளது. next-gen Galaxy Fold போன், செங்குத்து முறையில் திறந்து மடிந்து, ஒரு கிளாம்ஷெல் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை $ 1,000-க்குக் குறைவாக இருக்கும். கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Motorola Razr (2019) இதேபோன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்