Photo Credit: Flipkart
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட கேட்ஜெட் எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். செல்போன் தாண்டி மற்ற தொழில்நுட்ப தகவல்களும் உங்களை வந்து சேரும். இப்போ நாம் பார்க்க இருப்பது Huawei Band 9 வாட்ச் பற்றி தான்.
Huawei Band 9 இந்தியாவில்வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது Swimming Mode ஆப்ஷனுடன் வருகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 14 நாட்கள் பேட்டரி ஆயுளை கொடுக்கும். இது ஜூலை 2024ல் அறிமுகமான Huawei Band 8 மாடலின் அடுத்த வாரிசாக வருகிறது. 2.5D AMOLED திரையுடன் வருகிறது. எப்பொழுதும்-ஆன்-டிஸ்ப்ளே (AOD) அம்சத்தை சப்போர்ட் செய்கிறது. உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி கண்காணிப்பு, தூக்கம், மன அழுத்தம், இரத்த ஆக்ஸிஜன் அளவு மற்றும் இதய துடிப்பு கண்காணிப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பக்கவாதம் மற்றும் செயல்திறன் போன்ற பல அளவீடுகளைக் கண்காணிக்கக்கூடியது.
இந்தியாவில் Huawei Band 9 ஆரம்ப விலை ரூ. 3,999. இது சிறப்பு விலை என கூறப்படுகிறது. இதன் MRP விலை ரூ. 5,999. கருப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் பேண்ட் ஜனவரி 17 முதல் Flipkart தளத்தில் வாங்குவதற்கு கிடைக்கும்.
Huawei Band 9 ஆனது 194 x 368 பிக்சல்கள் மற்றும் 282 ppi பிக்சல் அடர்த்தி கொண்ட 1.47-இன்ச் செவ்வக வடிவில் டச்-சப்போர்ட் கொண்ட AMOLED திரையுடன் வருகிறது. இது Android மற்றும் iOS சாதனங்களுக்கு சப்போர்ட் ஆகிறது. புளூடூத் 5.0 வசதி மூலம் இணைக்கலாம். ஸ்மார்ட் பேண்டின் கேஸில் வலது விளிம்பில் பொத்தான் உள்ளது. இது 50 மீட்டர் வரை நீர் தாங்கும் திறன் கொண்டது.
முடுக்கமானி, கைரோஸ்கோப் மற்றும் ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார் போன்ற சென்சார்களைக் கொண்டுள்ளது. இதயத் துடிப்பு, SpO2, சுவாச வீதம் மற்றும் அசாதாரண சுவாசம் ஆகியவற்றைக் கண்காணிக்க உதவுகிறது. இது உறக்கச் சுழற்சியைக் கண்காணிப்பதற்காக Huawei நிறுவனத்தின் TrueSleep தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதய துடிப்பில் ஏதேனும் மாற்றம் கண்டறியப்பட்டால் அது பற்றிய தகவலை வழங்குகிறது. புதிய மல்டி-சேனல் மாட்யூல் மற்றும் ஸ்மார்ட் ஃப்யூஷன் அல்காரிதம் ஆகியவற்றின் மூலம் மேம்படுத்தப்பட்ட இதய துடிப்பு கண்காணிப்பை வழங்க முடியும் என்று Huawei கூறுகிறது.
Huawei நிறுவனம் வெளியிட்ட தகவல்படி, இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 14 நாட்கள் வரை நீடிக்கும். அதே நேரத்தில் ஆல்வேஸ் ஆன் முறையில் (AOD) இயக்குவது பேட்டரி ஆயுளை மூன்று நாட்களாக குறைக்கிறது. இதை வெறும் 45 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்