Samsung கடந்த மாதம் இரண்டு புதிய Galaxy A-சீரிஸ் போன்களான Galaxy A51 மற்றும் Galaxy A71-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த இரண்டு போன்களும் அடுத்த வார தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று ஒரு புதிய அறிக்கை கூறுகிறது. கூடுதலாக, இந்திய சந்தைக்கான இந்த இரண்டு புதிய சாம்சங் போன்களின் விலையும் கசிந்துள்ளது. டிசம்பரில் வியட்நாமில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இறுதியாக ஐரோப்பாவிலும் Galaxy A51 மற்றும் Galaxy A71 ஆகியவற்றின் கிடைக்கும் தன்மையையும் சாம்சங் விரிவுபடுத்துகிறது. அங்கு இந்த இரண்டு போன்களும் இப்போது முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் Galaxy A51-ன் விலை ரூ. 22,990 என்று 91Mobiles தெரிவித்துள்ளது. இருப்பினும், இது 4GB அல்லது 6GB RAM வேரியண்டின் விலையாக இருக்குமா என்று அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. Galaxy A71-ஐப் பொறுத்தவரை, இந்தியாவில் ரூ. 29,990 விலைக் குறியீட்டுடன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும், இது போனின் 4GB அல்லது 6GB RAM வேரியண்டிற்கான விலைக் குறியாக இருக்குமா என்பதில் தெளிவு இல்லை.
தனித்தனியாக, மூன்று Dutch சில்லறை விற்பனையாளர்கள் - Mobiel, BelSimpel மற்றும் CoolBlue - Galaxy A51-க்கான முன்கூட்டிய ஆர்டர்களை எடுக்கத் தொடங்கி ஜனவரி 17 முதல் அனுப்புவதாக உறுதியளித்துள்ளனர். போனின் 4GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு EUR 369 (இந்திய மதிப்பில் ரூ. 30,000)-யாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Galaxy A71-ன் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு EUR 460 (இந்திய மதிப்பில் ரூ. 38,000)-யாக முன்கூட்டிய ஆர்டர்களும் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், ஏற்றுமதியானது ஜனவரி 31, 2020 முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்