64 மெகா பிக்சல் திறன் கொண்ட Samsung Galaxy A70s விரைவில் ரிலீஸ்- சுட சுட அப்டேட்!

விளம்பரம்
Written by Indo-Asian News Service மேம்படுத்தப்பட்டது: 20 செப்டம்பர் 2019 10:07 IST
ஹைலைட்ஸ்
  • Samsung Galaxy A70s இந்த மாதம் ரிலீஸ் ஆக வாய்ப்பு
  • சில நாட்களுக்கு முன்னர் சாம்சங், Galaxy A50s and Galaxy A30s வெளியிட்டது
  • Samsung Galaxy A70s, சுமார் ரூ.30,000 இருக்கலாம்

சாம்சங் நிறுவனம், முன்னதாக வெறும் 70 நாட்களில் சுமார் 50 லட்சம் A வரிசை போன்களை விற்று, சுமார் 1 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. 

சாம்சங் நிறுவனம், தனது A வரிசை போன்களை மிகப் பெரிய அளவுக்கு இந்தியாவில் சந்தைப்படுத்த முயன்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த மாத இறுதிக்குள் 64 மெகா பிக்சல் கேமரா கொண்ட சாம்சங் கேலக்ஸி A70s ஸ்மார்ட் போனை, அந்நிறுவனம் வெளியிடும் என்று தெரிகிறது. 

இரண்டு வகைகளில் இந்த போன் இந்திய சந்தைக்கு வரும் என்று தெரிவிக்கப்படும் நிலையில், அதன் விலை ஏறக்குறைய 30,000 ரூபாயை ஒட்டியிருக்கலாம். சமீபத்தில் வெளியான கேலக்ஸி A30s ஸ்மார்ட் போனின் அதிநவீன டிசைன்களை A70s-ம் பெற்றிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

சாம்சங் நிறுவனம், முன்னதாக வெறும் 70 நாட்களில் சுமார் 50 லட்சம் A வரிசை போன்களை விற்று, சுமார் 1 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. 

“இந்த ஆண்டு முடிவுக்குள் சாம்சங் கேலக்ஸி A வகை போன்களின் சந்தையை 4 பில்லியன் டாலர் அளவுக்கு விரிவுப்படுத்துவதுதான் எங்களின் குறிக்கோள்” என்று சாம்சங் இந்தியாவின் முதன்மை மார்க்கெட்டிங் அதிகாரி ரஞ்சிவிஜித் சிங் கூறியுள்ளார். 

கடந்த வாரம் சாம்சங் நிறுவனம், சாம்சங் கேலக்ஸி A50s மற்றும் A30s போன்களை இந்தியாவில் ரிலீஸ் செய்தது. முன்னதாக வெளியான A50 மற்றும் A30 போன்களின் அப்டேட்டட் வெர்ஷனாக தற்போது வெளியிடப்பட்ட போன்கள் சந்தைக்கு வந்தன. 

கேலக்ஸி A50s போனின் 6 ஜிபி + 128 ஜிபி வகை 24,999 ரூபாய்க்கும், 4 ஜிபி + 128 ஜிபி வகை 22,999 ரூபாய்க்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல கேலக்ஸி A30s போனின் 4 ஜிபி + 64 ஜிபி வகை 16,999 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. 

இதைத் தவிர சாம்சங் நிறுவனம் தனது M வரிசை போன்களின் இரண்டு புதியவற்றை அறிமுகம் செய்துள்ளது. கேலக்ஸி M30s மற்றும் M10s போன்கள் அமேசான் தளம் மற்றும் சாம்சங் ஆன்லைன் தளத்தில் மட்டுமே கிடைக்கும். 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஒப்போ ரெனோ 15A 5G 7,000mAh பேட்டரி, 50-மெகாபிக்சல் மெயின் கேமராவுடன் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  2. அமேசான் பிரைம் டே 2026 விற்பனை தேதிகள் அறிவிப்பு, பிரைம் மெம்பர்ஷிப் விலை ரூ. 999 ஆகக் குறைந்தது
  3. அடுத்த பிளாக்ஷிப் போன்களுக்காக எக்ஸினோஸ் 2700 உருவாக்கத்தை சாம்சங் நிர்வாகி உறுதிப்படுத்தியதாக தகவல்
  4. மெமரி சிப் பற்றாக்குறைக்கு மத்தியில் ஐபோன், மேக் விலைகளை ஆப்பிள் உயர்த்தக்கூடும், டிம் குக் கூறுகிறார்
  5. ஒன்பிளஸ் Nord CE 6 போன்ற அதே பேட்டரியுடன் இந்தியாவில் அறிமுகமாகிறது ஒன்பிளஸ் N6
  6. ஆண்ட்ராய்டு ஹோம் ஸ்கிரீன் மூலம் விரைவாக அணுக வாட்ஸ்அப் வாய்ஸ் நோட் விட்ஜெட்டில் வேலை செய்கிறது
  7. கூகுளின் ஆண்ட்ராய்டு 17 அப்டேட் இந்த பிக்சல் சாதனங்களுடன் இணக்கமானது: முழுமையான பட்டியலைப் பார்க்கவும்
  8. ஜெமினி, கிளாட் வளர்ச்சியால் சாட்ஜிபிடி சந்தைப்பங்கு முதல்முறையாக 50% கீழ் சரிந்தது
  9. கேலக்ஸி போன்களுக்கு AI செல்லப்பிராணி சுகாதார கருவியை விவாடெக் 2026 இல் அறிமுகம் செய்தது சாம்சங்
  10. மோட்டோரோலா ரேஸர் ஃபோல்டு மதிப்பாய்வு:இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகச்சிறந்த முதல் தலைமுறை மடிக்கக்கூடிய போனா?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.