சாம்சங் இந்தியாவில் தனது Galaxy A70s ஸ்மார்ட்போனுக்கான ஒன் யுஐ 2.0 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை A707FDDU2BTC2 பில்ட் எண்ணுடன் வெளியிடத் தொடங்கியுள்ளது. தென் கொரிய நிறுவனம் உக்ரைனில் உள்ள Samsung Galaxy A70 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 ரோல்அவுட்டை மீண்டும் தொடங்கியுள்ளது என்று கூறுகிறது. பிப்ரவரியில் Galaxy A70-யின் ஆரம்ப ஆண்ட்ராய்டு 10 அப்டேட் உக்ரேனில் அறியப்படாத காரணங்களால் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இருப்பினும், இந்த அப்டேட் இப்போது நேரலையில் உள்ளது, ஆனால் ஆரம்பத்தில் உக்ரைனில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே இது வரையறுக்கப்பட்டுள்ளது, விரைவில் மற்ற சந்தைகளில் எதிர்பார்க்கப்படுகிறது.
Samsung Galaxy A70s அப்டேட் சாம்சங்கின் சமீபத்திய ஒன் யுஐ 2.0 உடன் Android 10-ஐக் கொண்டுவருகிறது, மேலும் கணினி அளவிலான டார்க் மோடை இடைப்பட்ட ஸ்மார்ட்போனுக்கு வழங்குகிறது. டைசென்ஹெல்ப் அளித்த அறிக்கை, இந்த அப்டேட் தற்போது இந்தியாவுக்கு மட்டுமே என்று வரையறுக்கப்பட்டுள்ளது, ஆனால் இது வரும் வாரங்களில் மற்ற சந்தைகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Samsung Galaxy A70s மேனுவலாக அப்டேட் செய்ய பயனர்கள் தங்கள் போன்கலில் அப்டேட் அறிவிப்புக்காக காத்திருக்க முடியும், இந்தியாவில் பயனர்கள் பின்வரும் படிகளைப் பின்பற்றலாம்: Settings > Software update > Download and install > Install now. Galaxy A70s-ல் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் 2 ஜிபி ஃபைல் அளவுடன் வருகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், Samsung Galaxy A70 ஆண்ட்ராய்டு 10 புதுப்பிப்பு, ஆரம்பத்தில் பிப்ரவரி மாதம் உக்ரைனில் சாம்சங்கின் ஒன் யுஐ 2.0 அப்டேட் மற்றும் பிப்ரவரி 2020 பாதுகாப்பு இணைப்புடன் வெளியிடப்பட்டது. இந்த பிப்ரவரி அப்டேட் ஃபார்ம்வேர் பதிப்பு A705FNXXU5BTB9 உடன் தொடங்கப்பட்டது. அறியப்படாத காரணங்களால் சில பயனர்கள் மட்டுமே ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை பெற முடிந்தது என்று டைசன்ஹெல்ப் அறிக்கை கூறுகிறது. இப்போது, ரோல்அவுட் மீண்டும் தொடங்கியது என்று அறிக்கை மேலும் கூறுகிறது. பிப்ரவரி ஆண்ட்ராய்டு 10 அப்டேட் உக்ரேனில் வெளியிடப்பட்டது, இது UI, புதிய Digital Wellbeing செயலி மற்றும் இன்னும் சிறிய மாற்றங்கள் மற்றும் பிழை திருத்தங்களை மேம்படுத்தியது. உண்மையில், பிப்ரவரி மாதம் உக்ரைனில் வெளியிடப்பட்ட ஆண்ட்ராய்டு 10 அப்டேட் சாம்சங்கின் சாலை வரைபடத்தை விட முன்னதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது, இது Galaxy A70 அப்டேட்டை ஏப்ரல் 2020-க்கு நிர்ணயித்தது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்