Samsung Galaxy A51 போன் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டு octa-core SoC-யால் இயக்கப்படுகிறது.
Samsung Galaxy A51 இன்று இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. தென் கொரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் திங்களன்று சமூக ஊடக பதிவு மூலம் நாட்டில் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் திட்டங்களை அறிவித்திருந்தார். நினைவுகூர, Samsung Galaxy A51 கடந்த மாதம் வியட்நாமில் Galaxy A71 உடன் வெளியிடப்பட்டது. அதன் முழுமையான விவரக்குறிப்புகளை வெளிப்படுத்தும் அதே வேளையில் அதன் விலை குறித்த ஒரு யோசனையை எங்களுக்குக் கொடுத்தது. சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போன் Infinity-O டிஸ்ப்ளேவுடன் வருகிறது.
இந்தியாவில் Samsung Galaxy A51 விலை அதன் வியட்நாம் விலைக்கு அருகில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். Samsung Galaxy A51-ன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை VND 7,990,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 24,600)-க்கு அறிமுகப்படுத்தியது. சமீபத்திய வதந்தி Samsung Galaxy A51 இந்தியாவில் ரூ. 22,990-யாக இருக்கும் என்று கூறுகிறது.
Samsung Galaxy A51-ன் எத்தனை வகைகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. அதன் உலகளாவிய அறிமுகத்தின் போது 8 ஜிபி வரை ரேம் அறிவிக்கப்பட்டுள்ளது. வியட்நாமில், Samsung ஸ்மார்ட்போனை Blue, Pink, Prism Crush Black மற்றும் White என நான்கு முடிவுகளில் வழங்குகிறது. இப்போதைக்கு, Samsung Galaxy A51 இன்று இந்தியாவில் எந்த நேரத்தில் அறிமுகம் செய்யப்படும் என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது. ஆனால், உடனடி செய்திகளுக்கு கேஜெட்ஸ் 360 உடன் இணைந்திருங்கள்.
வியட்நாமில் அறிமுகப்படுத்தப்பட்ட மாடலைப் பொறுத்தவரை, Samsung Galaxy A51, 6.5-inch full-HD+ (1080x2400 pixels) Super AMOLED Infinity-O டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டு octa-core SoC-யால் இயக்கப்படுகிறது. மேலும், f/2.0 lens உடன் 48-மெகாபிக்சல் முதன்மை சென்சார், f/20 aperture உடன் 12-மெகாபிக்சல் ultra-wide-angle கேமரா மற்றும் f/2.4 macro lens 5-மெகாபிக்சல் சென்சார், அதே போன்று f/2.2 lens உடன் 5-மெகாபிக்சல் depth சென்சார் ஆகியவை அடங்கிய குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
Samsung Galaxy A51, One UI 2.0 உடன் Android 10-ல் இயங்குகிறது. இது இரட்டை 4 ஜி மற்றும் VoLTE க்கான ஆதரவுடன் இரட்டை சிம் சாதனமாகும். சாம்சங், 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜை Galaxy A51-க்கு வழங்குகிறது. இதனை microSD card வழியகா (512GB வரை) விரிவாக்கம் செய்யலாம். தவிர, இந்த போன் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,590
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹41,061
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999