Samsung Galaxy A50s-க்கான ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வெளியீடு! 

Samsung Galaxy A50s-க்கான ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வெளியீடு! 

இந்தியாவில் Samsung Galaxy A50s கடந்த ஆண்டு Android 9 Pie உடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஹைலைட்ஸ்
  • Galaxy A50s, புதிய அப்டேட்டின் மூலம் One UI 2-ஐப் பெறத் தொடங்கியுள்ளன
  • இந்த போன், 1.6 ஜிபி அளவிலான அப்டேட்டை பெறுகிறது
  • Galaxy A50s இந்த மாத தொடக்கத்தில் வியட்நாமில் ஆண்ட்ராய்டு 10-ஐப் பெற்றன
விளம்பரம்

Samsung Galaxy A50s தனது ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை இந்தியாவில் One UI 2 உடன் பெறத் தொடங்கியுள்ளதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. சமீபத்திய அப்டேட்டில் பிப்ரவரி 2020 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பு அடங்கும் என்று கூறப்படுகிறது. புதிய அப்டேட் இடைமுக-நிலை மாற்றங்களின் பட்டியலையும் கொண்டு வர வாய்ப்புள்ளது. வியட்நாமில் உள்ள Galaxy A50s பயனர்கள் முதலில் ஆண்ட்ராய்டு 10 புதுப்பிப்பைப் பெற்றனர். சாம்சங், Galaxy A50s-ஐ கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. 

Samsung Galaxy A50s-க்கான சமீபத்திய மென்பொருள் அப்டேட் A507FNXXU3BTB2 பதிப்பைக் கொண்டுள்ளது என்று சாம்மொபைல் தெரிவித்துள்ளது. மென்பொருள் பதிப்பு குறிப்பாக இந்த மாத தொடக்கத்தில் வியட்நாமிற்கு வந்தது. ஆன்லைன் அறிக்கையில் பகிரப்பட்ட ஸ்கிரீன்ஷாட் பிப்ரவரி 2020 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு பேட்சையும் உள்ளடக்கியது மற்றும் 1.6 ஜிபி அளவைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

Android 10 அப்டேட் இருப்பதால், Galaxy A50s மேம்படுத்தப்பட்ட டார்க் மோடைப் பெற்றுள்ளன. இந்த அப்டேட் One U-ஐ மென்மையான அனிமேஷன் விளைவுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஒரு கை பயன்பாட்டினை மேம்படுத்துகிறது. மேலும், இந்த அப்டேட் சைகை உள்ளீடுகளை மேம்படுத்துகிறது.

samsung galaxy a50s android 10 update india screenshot sammobile Samsung Galaxy A50s

Samsung Galaxy A50s இந்தியாவில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டைப் பெறுவதாக கூறப்படுகிறது
Photo Credit: SamMobile

Settings > Software update > Download and install செய்வதன் மூலம் பயனர்கள் தங்கள் Samsung Galaxy A50s-ல் ஆண்ட்ராய்ட் 10 புதுப்பிப்பின் கிடைக்கும் தன்மையை சரிபார்க்கலாம்.

நவம்பரில் சாம்சங் உறுப்பினர்கள் செயலியில் வெளியிடப்பட்ட சாலை வரைபடத்தின்படி, Galaxy A50s ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை ஏப்ரல் மாதத்தில் பெற திட்டமிடப்பட்டது. தென் கொரிய நிறுவனம் புதிய மென்பொருள் பதிப்பை அசல் அட்டவணைக்கு முன்னால் கொண்டு வந்துள்ளது என்பதை இது காட்டுகிறது.

Samsung Galaxy A50s கடந்த ஆண்டு Android 9 Pie உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் 6.4 இன்ச் ஃபுல்-எச்டி + (1080x2340 பிக்சல்கள்) இன்ஃபினிட்டி-யு சூப்பர் அமோலேட் டிஸ்பிளேவுடன் வருகிறது, இது ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9611 SoC-யால் இயக்கப்படுகிறது, இது 4 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 64 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜும் உள்ளது. மேலும், இந்த போன் 48 மெகாபிக்சல் முதன்மை ஷூட்டர், 32 மெகாபிக்சல் செல்பி கேமரா மற்றும் 4,000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Bright, vivid display
  • Good photos in daylight
  • Useful software features
  • Bad
  • Underwhelming performance for the price
  • Weak camera performance in low light
  • Generic design, average build quality
Display 6.40-inch
Processor Samsung Exynos 9611
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel + 8-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  2. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
  3. S25 Ultra: கேமரா, பேட்டரி, AI அம்சங்களுடன் மலிவான விலையில்! மிஸ் பண்ணிடாதீங்க!
  4. Dimensity 7060 சிப்செட்டுடன் Lava Storm Play 5G: கேமர்கள், பட்ஜெட் 5G-க்கு ரெடியா?
  5. கலக்கும் Realme C71: 50MP கேமரா, நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி - வேற லெவல் போன்
  6. Nothing-ன் புது அவதாரம்! Phone 3, Headphone 1: மாஸ் லான்ச்சுக்கு ரெடியாகுங்க
  7. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  8. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  9. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  10. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »