Samsung Galaxy A11, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கும்.
Samsung Galaxy A11 ஆக்டா கோர் பிராசசர் மூலம் இயக்கப்படும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது
Samsung Galaxy A11 அதன் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக்கப்பட்டுள்ளது, விவரக்குறிப்புகள் மற்றும் அதிகாரப்பூர்வ ரெண்டர்களை பட்டியலிடுகிறது. போனின் கிடைக்கும் தன்மை மற்றும் விலை இன்னும் பட்டியலிடப்படவில்லை, ஆனால் ரெண்டர்கள் ஒரு ஹோல்-பஞ்ச் வடிவமைப்பு மற்றும் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் காட்டுகின்றன. Samsung Galaxy A11 கருப்பு, நீலம், சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய நான்கு கலர் ஆப்ஷன்களில் வர பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான புதிய Galaxy A-சீரிஸ் போர்ட்ஃபோலியோவில் Galaxy A51 மற்றும் Galaxy A71 போன்களை சாம்சங் ஏற்கனவே வெளியிட்டுள்ளது, இப்போது நுழைவு நிலை Galaxy A11 அதிகாரப்பூர்வமாகிவிட்டது.
குறிப்பிட்டுள்ளபடி, Galaxy A11's கிடைக்கும் தன்மை மற்றும் விலையை Samsung இன்னும் வெளியிடவில்லை. முதலில் எந்த சந்தையில் போன் வெளியிடப்படும் என்று எந்த தகவலும் இல்லை. Galaxy A11-ன் விலை, சந்தையைப் பொறுத்து மாறுபடும், இப்போது அது அதிகாரப்பூர்வமாக இருப்பதால், சந்தை வாரியான வெளியீட்டை விரைவில் காணலாம். பின்புறத்தின் மூன்று பின்புற கேமராக்கள் பேனலின் மேல் இடது மூலையில் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ளன. வால்யூம் மற்றும் பவர் பொத்தான்கள் திரையின் வலது விளிம்பில் வைக்கப்பட்டுள்ளன. செல்பி கேமரா கட்அவுட் திரையின் மேல் இடது மூலையில் வைக்கப்பட்டுள்ளது.
விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, Samsung Galaxy A11, 6.4 இன்ச் எச்டி + (720x1560 பிக்சல்கள்) இன்ஃபினிட்டி-ஓ டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும். 2 ஜிபி மற்றும் 3 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டு, பெயரிடப்படாத 1.8GHz ஆக்டா கோர் பிராசசர் மூலம் இந்த போன் இயக்கப்படுகிறது. இன்பில்ட் ஸ்டோரேஜ் 32 ஜி.பியில் உள்ளது, மேலும் மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) விரிவாக்கம் செய்யலாம்.
பின்புறத்தில் உள்ள டிரிபிள் கேமரா அமைப்பில் f/1.8 aperture உடன் 13 மெகாபிக்சல் பிரதான கேமரா, f/2.4 aperture உடன் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் f/2.2 aperture உடன் 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் ஆகியவை அடங்கும். f/2.0 aperture உடன் 8 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. Samsung Galaxy A11, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கும். இந்த சாதனம் முக அங்கீகாரம் மற்றும் பின்புற கைரேகை சென்சார் ஆகியவற்றை ஆதரிக்கிறது. இந்த போன் 161.4x76.3x8.0 மிமீ அளவு மற்றும் 177 கிராம் எடையுள்ளவை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale
Samsung Galaxy Tab S12 Ultra Allegedly Listed on Geekbench With MediaTek Dimensity 9500 Chipset