விற்பனைக்கு வந்தது Samsung Galaxy A71...! 

Samsung Galaxy A71-ன் ஒரே 8GB + 128GB மாடலின் விலை ரூ.29,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விற்பனைக்கு வந்தது Samsung Galaxy A71...! 

Samsung Galaxy A71 மூன்று கலர் ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது

ஹைலைட்ஸ்
  • Samsung Galaxy A71, Snapdragon 730 SoC-யால் இயக்கப்படுகிறது
  • இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது
  • Samsung Galaxy A71, பின்புறத்தில் குவாட்-கேமரா அமைப்புடன் வருகிறது
விளம்பரம்

Samsung Galaxy A71 இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது, இது சாம்சங் ஸ்டோர் மற்றும் அமேசானில் கிடைக்கிறது. இந்த போன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 730 SoC-யால் இயக்கப்படுகிறது. இது மூன்று கலர் ஆப்ஷன்களில் வருகிறது. 


Samsung Galaxy A71 விலை:

Galaxy A71-ன் விலை ரூ.29,999 ஆகும் மற்றும் Amazon, Samsung store மற்றும் சாம்சங் ஓபரா ஹவுஸில் கிடைக்கிறது. இது நாட்டின் முன்னணி ஆன்லைன் ஸ்டோர் வழியாகவும் விற்பனைக்கு வரும். குறிப்பிட்டுள்ளபடி, இந்த போன் 8 ஜிபி + 128 ஜிபி மாடலில் வழங்கப்படுகிறது மற்றும் Prism Crush Black, Prism Crush Blue மற்றும் Prism Crush Silver என மூன்று கலர் ஆப்ஷன்களில் வருகிறது. 


Samsung Galaxy A71 விவரக்குறிப்புகள்: 

டூயல்-சிம் Samsung Galaxy A71, Infinity-O டிஸ்பிளேவுடன் வருகிறது, மேலும் மையமாக அமைந்துள்ள நாட்ச் 6.70 இன்ச் (1080x2400) சூப்பர் அமோலேட் பிளஸ் டிஸ்பிளேவில் முன் கேமராவைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் உள்ள கேமராக்களில் 64 மெகாபிக்சல் பிரதான ஷூட்டர், 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா, 5 மெகாபிக்சல் depth சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவை அடங்கும். அவை அதிகபட்சமாக 8x வரை டிஜிட்டல் ஜூம் கொண்டிருக்கின்றன, மேலும் UHD 4K வீடியோவை (3840 x 2160) 30fps-ல் பதிவு செய்யலாம்.

Samsung Galaxy A71, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth v5.0, a 3.5mm headphone jack மற்றும் சார்ஜிங்கிற்காக USB Type-C port ஆகியவற்றை பெறலாம். இது 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜுடன் வருகிறது. இந்த போன் in-display fingerprint சென்சாரையும் கொண்டுள்ளது.

Galaxy A71 என்பது சாம்சங்கின் ஏ-சீரிஸ் போன்களுக்கு மற்றொரு கூடுதலாகும், மேலும் Galaxy A70s-ப் பின்தொடரும். இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 SoC, பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு மற்றும் 32 மெகாபிக்சல் முன் கேமரா மூலம் இயக்கப்பட்டது. இது 6 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி ஆகிய இரண்டு வேரியண்டுகளைக் கொண்டிருந்தது, அவை முறையே ரூ.25,999 மற்றும் ரூ.27,999 ஆகும்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Galaxy S26: Camera Upgrades மற்றும் Snapdragon 8 Elite Gen 5 உடன் முழு விவரங்கள் லீக்
  2. வெறும் ₹1,299-க்கா ANC நெக்பேண்டா? Lava-வோட இந்த புதிய ஆடியோ ப்ராடக்ட் எப்படி இருக்குன்னு பாருங்க!
  3. மொபைல் கெய்மிங்க்கு இதான் Next Level! OnePlus 15 பத்தி தெரிஞ்சுக்கணுமா? மிஸ் பண்ணாதீங்க
  4. இந்திய கம்பெனில இருந்து மிரட்டலான போன்! Lava Agni 4 டீஸர் பத்தி முழு விவரம்!
  5. ரியல்மி-யின் புதிய ராக்கெட்! Realme GT 8 Pro நவம்பர்-ல் Flipkart-ல் தரையிறங்குகிறது!
  6. 7,500mAh சார்ஜரே இல்லாத பேட்டரியா? புதிய iQOO Neo 11 மாடல் சும்மா தெறிக்குது!
  7. 200MP Zeiss கேமராவுடன் Vivo X300 Pro அறிமுகம்! கேமரா பிரியர்களுக்கு ஒரு பொக்கிஷம்
  8. iQOO-வின் அடுத்த ராக்கெட்! iQOO 15, 10,000+ Multi-Core ஸ்கோருடன் Geekbench-ல் மிரட்டல்
  9. ஒன்ப்ளஸ், iQOO-வுக்கு போட்டியாக Realme! GT 8 Pro நவம்பர் 20-ல் இந்தியாவில் அறிமுகம்?
  10. Snapdragon 8 Elite Gen 5 சில்லுடனான முதல் போன்! OnePlus 15 Flagship-ன் ஸ்பெஷல் அம்சங்கள் இதோ
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »