Samsung Galaxy A71 5G விலை $ 599.99 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.45,800) ஆகும். Samsung Galaxy A51 5G விலை $ 499.99 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.38,100) ஆகும்.
சாம்சங் கேலக்ஸி ஏ 71 5 ஜி, கேலக்ஸி ஏ 51 5 ஜி போன்கள் இந்த கோடையில் அமெரிக்காவில் கிடைக்கும்
சாம்சங் தனது சாம்சங் கேலக்ஸி ஏ 71 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ 51 போன்களின் 5 ஜி மாடல்களை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது. போனின் விலை, விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
Samsung Galaxy A71 5G விலை $ 599.99 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.45,800) ஆகும். இந்த போன் ப்ரிஸம் கியூப் பிளாக், ப்ரிஸம் கியூப் சில்வர் மற்றும் பிரிசம் கியூப் ப்ளூ கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும்.
Samsung Galaxy A51 5G விலை $ 499.99 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.38,100) ஆகும். இந்த போன் ப்ரிஸம் கியூப் பிளாக், பிரிசம் கியூப் ஒயிட் மற்றும் பிரிசம் கியூப் பிங்க் கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும். இந்த இரண்டு போன்களும் விரைவில் அமெரிக்காவில் கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி ஏ 71 5 ஜி, 6.7 இன்ச் முழு எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) சூப்பர் அமோலேட் இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே கொண்டுள்ளது. போனில் பெயரிடப்படாத ஆக்டா கோர் பிராசசர் உள்ளது (இரட்டை 2.2GHz + ஹெக்ஸா 1.8GHz). இது ஸ்னாப்டிராகன் 765 ஜி SoC-யாக இருக்கலாம்.
போனில் குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதில், 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 12 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் ஆகியவை அடங்கும். கேமரா அமைப்பில், 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் சென்சார் ஆகியவையும் அடங்கும். செல்ஃபிக்களுக்காக, முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.
இந்த போன் 8 ஜிபி ரேம் மற்றும்128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதனை, மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1 டிபி வரை ஸ்டோரேஜ் விரிவாக்கம் செய்யலாம். சாம்சங் கேலக்ஸி ஏ 71 5 ஜி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. போனில் டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ 51 5 ஜி, 6.5 இன்ச் சூப்பர் அமோலேட் ஃபுல்-எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) இன்ஃபினிட்டி-ஓ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. போனில் பெயரிடப்படாத ஆக்டா-கோர் SoC (இரட்டை 2.2GHz + ஹெக்ஸா 1.8GHz) உள்ளது. இது 8 ஜிபி ரேம் வரை பேக் செய்கிறது.
இந்த போன், ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமராவும், 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவும் மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். போனின் முன்புறத்தில், 32 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சார் உள்ளது.
இந்த போன் 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதனை மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தி 1TB வரை விரிவாக்கம் செய்யலாம். சாம்சங் கேலக்ஸி ஏ 51 5 ஜி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த போன் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சாரைக் கொண்டுள்ளது.
OnePlus 8 leaks look exciting but when will the phones launch in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Salliyargal Now Streaming Online: Where to Watch Karunaas and Sathyadevi Starrer Online?
NASA’s Chandra Observatory Reveals 22 Years of Cosmic X-Ray Recordings
Space Gen: Chandrayaan Now Streaming on JioHotstar: What You Need to Know About Nakuul Mehta and Shriya Saran Starrer
NASA Evaluates Early Liftoff for SpaceX Crew-12 Following Rare ISS Medical Evacuation