சாம்சங் கேலக்ஸி ஏ 31 இந்தியாவில் சுமார் ரூ.23,000-க்கு அறிமுகப்படுத்தப்படலாம்.
சாம்சங் கேலக்ஸி ஏ 31 மார்ச் மாதத்தில் உலகளவில் வாட்டர் டிராப்-ஸ்டைல் டிஸ்ப்ளே நாட்சுடன் வெளியிடப்பட்டது
Samsung கேலக்ஸி ஏ 31 ஜூன் முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். இந்த போன் ஜூன் 4 ஆம் தேதி சந்தைக்கு வரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த போன் இந்தியாவில் சுமார் ரூ.23,000-க்கு அறிமுகப்படுத்தப்படலாம். இந்த போன் நான்கு வண்ணங்களில் கிடைக்கும். டிஸ்ப்ளேவுக்கு மேலே ஒரு வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் உள்ளது. இந்த போன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும்.
மார்ச் மாதத்தில், எஸ்.எம்-ஏ 315 எஃப் மாடல் எண்ணுடன் Samsung Galaxy A31-ன் விவரக்குறிப்பு கீக்பெஞ்ச் இணையதளத்தில் தோன்றியது. இந்த போன் Android 10 ஓஎஸ்-ல் இயக்கும். போனின் உள்ளே மீடியா டெக் MT6768V / CA சிப்செட் இருக்கும். இந்த போன் MediaTek Helio P65 சிப்செட் மற்றும் 4 ஜிபி ரேம் உடன் வரக்கூடும்.
கேலக்ஸி ஏ 31-ல் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா இருக்கும் என்று மற்றொரு அறிக்கை சமீபத்தில் வெளிப்படுத்தியது. 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் செல்பி எடுக்க 16 மெகாபிக்சல் கேமரா இருக்கும். போனின் உள்ளே 5,000 எம்ஏஎச் பேட்டரி இருக்கும். சாம்சங் இந்த போனை 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜில் கொண்டு வரவுள்ளது.
Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Honor 600 Smart 5G With 7,700mAh Battery Listed on French Website, Could Launch Soon: Price, Features
Rockstar Games Confirms GTA 6 Pre-Orders Will Begin June 25, Reveals New Cover Art