'சாம்சங்' நிறுவனத்தின் 64-மெகாபிக்சல் கெமராவுடன் வெளியாகிறதா அடுத்த 'ரெட்மீ' ஸ்மார்ட்போன்?

சாம்சங் நிறுவனம், கடந்த மாதம் தனது 64 மெகாபிக்சல் கேமரா சென்சாரை அறிமுகப்படுத்தியது.

'சாம்சங்' நிறுவனத்தின் 64-மெகாபிக்சல் கெமராவுடன் வெளியாகிறதா அடுத்த 'ரெட்மீ' ஸ்மார்ட்போன்?

சியோமியின் அடுத்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் கேமராவுடன் வெளியாகலாம்

ஹைலைட்ஸ்
  • சீனாவில் இந்த 64 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போன் முதலில் அறிமுகமாகலாம்
  • சாம்சங் நிறுவனம் இந்த கேமரா சென்சாரை சென்ற மாதம் அறிமுகப்படுத்தியது
  • அடுத்த கேலக்சி A தொடர் ஸ்மார்ட்போன் இந்த கேமராவுடன் வெளியாகலாம்
விளம்பரம்

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி நிறுவனம், தனது அடுத்த ஸ்மார்ட்போனில் சாம்சங்-கின் 64 மெகாபிக்சல் கேமரா சென்சாரை பொருத்தி வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சாம்சங் நிறுவனம், கடந்த மாதம் தனது 64 மெகாபிக்சல் கேமரா சென்சாரை அறிமுகப்படுத்தியது. மேலும், இந்த கேமரா சென்சார் பொருத்தபட்ட சாம்சங் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன், 2019-ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் அறிமுகமாகலாம் என்றவாறு தகவல்கள் வெளியாகியிருந்தன. 

ஐஸ் யூனிவர்ஸ் ( Ice Universe ) என்ற தொழில்நுட்ப வல்லுனர், தனது வெய்போ கணக்கில் வெளியிட்டுள்ள தகவலின்படி, சாம்சங் நிறுவனம் 'கேலக்சி A' தொடரில் அறிமுகப்படுத்தவுள்ள அடுத்த ஸ்மார்ட்போனில் இந்த 64 மெகாபிக்சல் கேமராவை பொருத்தி வெளியிடவுள்ளது, அதேபோல ரெட்மீ நிறுவனமும் சீனாவில் அடுத்த அறிமுகப்படுத்தவுள்ள ஸ்மார்ட்போனில் இந்த 64 மெகாபிக்சல் கேமரா சென்சாரை பொருத்தி வெளியிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சாம்சங் 64 மெகாபிக்சல் கேமரா சென்சார், குறைந்த ஒளியில் 16 மெகாபிக்சல் அளவிலான புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கேமராவில் 1080 பிக்சல் ஸ்லோ-மோசன் வீடியோக்களை எடுத்துக்கொள்ளலாம்.

முன்னதாக, இந்த கேமரா சாம்சங் கேலக்சி A70 ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டு வெளியாகும் என தகவல்கள் கசிந்தன. ஆனால், அந்த ஸ்மார்ட்போன் 32 மெகாபிக்சல் அளவிலான கேமராவை கொண்டே அறிமுகமானது. தற்போது, இந்த கேமரா சாம்சங் கேலக்சி A70S பொருத்தப்பட்டு அறிமுகமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரெட்மீ நிறுவனத்தின் எந்த ஸ்மார்ட்போனில் இந்த 64 மெகாபிக்சல் கேமரா சென்சார் பொருத்தப்பட்டிருக்கும் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் ...மேலும்

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. ஒப்போ ஃபைண்ட் X9s இந்தியாவில் அறிமுகம்: ஹாசல்பிளாட் 50MP கேமரா மற்றும் 7,025mAh பேட்டரி
  2. ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் விமர்சனம்: கிட்டத்தட்ட ‘ப்ரோ’ தரத்திலான ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன்
  3. சியோமி ஸ்மார்ட் பேண்ட் 10 ப்ரோ அறிமுகம்: 1.74-இன்ச் AMOLED திரை, 21 நாட்கள் பேட்டரி ஆயுள்
  4. ஒப்போ ஃபைண்ட் X9s, விவோ X300 FE, ஒன்பிளஸ் 15: இந்திய விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  5. புதிய அடோப் மற்றும் கான்வா கனெக்டர்கள் மூலம் ஏஜென்டிக் வடிவமைப்பு உருவாக்கத்தை வழங்குகிறது கூகுளின் ஜெமினி
  6. ஒப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா மற்றும் விவோ X300 அல்ட்ரா: இதில் எது சிறந்தது?
  7. ஒப்போ ரெனோ 16 ,ரெனோ 16 கேமரா விவரம் டீஸ் செய்யப்பட்டது; இந்திய அறிமுக காலம் ஆன்லைனில் வெளியானது
  8. விவோ S தொடர் S2 மூலம் மீண்டும் இந்தியாவிற்கு: அறிமுக காலம், விலை விவரம் கசிந்தது
  9. HMD வைப் 2 5G இந்தியாவில் அறிமுகம்: 6,000mAh பேட்டரி, 128GB வரை சேமிப்பகம்: விலை, விவரக்குறிப்புகள்
  10. ஒப்போ ஃபைண்ட் X9s இந்தியாவில் அறிமுகம்: ஹாசல்பிளாட் 50MP கேமரா மற்றும் 7,025mAh பேட்டரி
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »