ரெட்மி நோட் 9 ப்ரோ ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகள் வழியாக கிடைக்கும்.
Photo Credit: Amazon
ரெட்மி நோட் 9 ப்ரோ கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது
ஷாவ்மி சப் பிராண்டின் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 9 ப்ரோ இன்று இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது. ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸுடன் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி நோட் 9 ப்ரோ, Aurora Blue, Glacier White மற்றும் Interstellar Black ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் வரும் இரண்டு வேரியண்டுகளைக் கொண்டுள்ளது. இதற்கிடையில், ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் மார்ச் 25 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரும். ரெட்மி நோட் 9 ப்ரோ நாட்டின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை நிலையங்கள் மூலம் கிடைக்கும்.
இந்தியாவில் Redmi Note 9 Pro (Review) 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.12,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.15,999 விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. ரெட்மியின் அதிகாரப்பூர்வ இந்தியா வலைத்தளம் வழியாக ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டால், நிறுவனம், பிற EMI ஆப்ஷன்களுடன் எச்.டி.எஃப்.சி வங்கி அட்டைகள் மூலம் ரூ.500 தள்ளுபடியை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் Amazon, எம்ஐ ஹோம் மற்றும் எம்ஐ ஸ்டுடியோ கடைகளிலும் கிடைக்கும். இந்த விற்பனை மதியம் 12 மணிக்கு தொடங்கும். நினைவுகூர, இந்த ஸ்மார்ட்போன் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
Redmi Note 8-சீரிஸின் தொடரான டூயல்-சிம் (நானோ) Redmi நோட் 9 ப்ரோ 6.67 அங்குல முழு எச்டி + (1080x2400 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேல். ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10-ல் இயங்குகிறது மற்றும் சமீபத்திய MIUI பதிப்பைக் கொண்டுள்ளது.
ஹூட்டின் கீழ், அட்ரினோ 618 ஜி.பீ.யு மற்றும் 6 ஜிபி வரை LPDDR4X ரேம் ஆகியவற்றுடன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720G SoC உள்ளது. கூடுதலாக, ஒரு குவாட் பின்புற கேமரா அமைப்பு உள்ளது, இதில் 48 மெகாபிக்சல் முதன்மை ஷூட்டர், 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் மேக்ரோ லென்ஸுடன் 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் ஆகியவை அடங்கும். depth sensing-கிற்காக நான்காவது 2 மெகாபிக்சல் நான்காம் நிலை சென்சார் உள்ளது.
முன் பக்கத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான அம்சங்களை ஆதரிக்கும் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. மேலும், ரெட்மி நோட் 9 ப்ரோ 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,020 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது.
Is Redmi Note 9 Pro the new best phone under Rs. 15,000? We discussed how you can pick the best one, on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
iQOO Z11, Buds Key Specifications and Features Revealed Ahead of Official India Launch
Oppo A7 Pro 5G Spotted on NBTC, SIRIM and SGS Databases, Launch Could Be Imminent