ரெட்மி நோட் 9 ப்ரோ, அமேசான், எம்ஐ.காம், எம்ஐ ஹோம் மற்றும் எம்ஐ ஸ்டுடியோ கடைகள் வழியாக விற்பனைக்கு வரும்.
 
                ரெட்மி நோட் 9 ப்ரோ, பெரிய 5,020 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது
ரெட்மி நோட் 9 ப்ரோ அமேசான் இந்தியாவில் முதல் விற்பனையில் வெறும் 90 வினாடிகளில் விற்று தீர்ந்துள்ளது என்று ஷாவ்மி கூறுகிறது. இந்த போன் எம்ஐ.காம், எம்ஐ ஹோம் மற்றும் எம்ஐ ஸ்டுடியோ கடைகளிலும் விற்பனைக்கு வந்தது. ரெட்மி நோட் 9 ப்ரோ அடுத்த வாரம் மார்ச் 24-ஆம் தேதி மீண்டும் விற்பனைக்கு வரும் என்று ஷாவ்மி இந்தியா தலைவர் மனு குமார் ஜெயின் அறிவித்துள்ளார். இந்த போன் Aurora Blue, Glacier White மற்றும் Interstellar Black கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
Redmi Note 9 Pro, 90 வினாடிகளில் விற்று தீர்ந்துள்ளது என்று அறிவிக்க ஜெயின் ட்விட்டருக்கு அழைத்துச் சென்றார். இந்த புள்ளிவிவரம் அமேசான் இந்தியாவில் நடைபெற்ற விற்பனைக்கு மட்டுமே பொருந்தும், எம்ஐ.காம், எம்ஐ ஹோம் மற்றும் எம்ஐ ஸ்டுடியோ கடைகள் வழியாக விற்கப்படும் யூனிட்டுகளுக்கு அல்ல. ரெட்மி நோட் 9 ப்ரோ கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.12,999-யாக நிர்ணயிக்கப்பட்டது. அதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.15,999 விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இரண்டாவது விற்பனை அடுத்த வாரம் மார்ச் 24 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன் இதேபோன்ற சேனல்கள் மூலம் விற்பனைக்கு வரும், இருப்பினும் பின்னர் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியீட்டு சலுகைகளில் எச்.டி.எஃப்.சி வங்கி கார்டுகள் மற்றும் EMI பரிவர்த்தனைகளுக்கு ரூ1,000 தள்ளுபடி மற்றும் ரூ.298 மற்றும் ரூ.398 அன்லிமிடெட் பேக்குகளில் ஏர்டெல் 4ஜி டபுள் டேட்டா சலுகைகள் ஆகியவை அடங்கும்.
டூயல்-சிம் (நானோ) ரெட்மி நோட் 9 ப்ரோ, MIUI 11 உடன் அண்ட்ராய்டு 10-ல் இயக்குகிறது, மேலும் 6.67 இன்ச் முழு எச்டி + (1080x2400 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது: இது 20: 9 விகிதத்தையும், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பையும் கொண்டுள்ளது . இது ஒரு ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720G SoC-யால் இயக்கப்படுகிறது, அதோடு அட்ரினோ 618 ஜி.பீ.யூ மற்றும் 6 ஜிபி வரை LPDDR4X ரேம் உள்ளது. ரெட்மி நோட் 9 ப்ரோ 128 ஜிபி வரை யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது, இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) ஒரு பிரத்யேக ஸ்லாட் மூலம் விரிவாக்கக்கூடியது.
இந்த போன் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில், எஃப் / 1.79 லென்ஸுடன் 48 மெகாபிக்சல் சாம்சங் ISOCELL GM2 முதன்மை சென்சாரைக் கொண்டுள்ளது. கேமரா அமைப்பில் 120 டிகிரி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் கொண்ட 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், மேக்ரோ லென்ஸுடன் 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் மற்றும் depth sensing-கிற்காக 2 மெகாபிக்சல் நான்காம் நிலை சென்சார் ஆகியவை உள்ளன. செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான அம்சங்களை ஆதரிக்கும் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சார் முன்பக்கத்தில் உள்ளது.
ரெட்மி நோட் 9 ப்ரோ 5,020 எம்ஏஎச் பேட்டரியை 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. கடைசியாக, இந்த போன் 165.7x76.6x8.8 மிமீ அளவு மற்றும் 209 கிராம் எடை கொண்டது. இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NavIC, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட சென்சாருடன் வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
 Samsung Internet Browser Beta for Windows PCs Launched with Galaxy AI Integration
                            
                            
                                Samsung Internet Browser Beta for Windows PCs Launched with Galaxy AI Integration
                            
                        
                     WhatsApp Announces Passkey-Encrypted Chat Backups With Biometric Authentication for Extra Security
                            
                            
                                WhatsApp Announces Passkey-Encrypted Chat Backups With Biometric Authentication for Extra Security
                            
                        
                     Apple CEO Tim Cook Forecasts Holiday Quarter iPhone Sales That Top Wall Street Estimates
                            
                            
                                Apple CEO Tim Cook Forecasts Holiday Quarter iPhone Sales That Top Wall Street Estimates
                            
                        
                     Realme GT 8 Pro India Launch Date Tipped After Company Confirms November Debut
                            
                            
                                Realme GT 8 Pro India Launch Date Tipped After Company Confirms November Debut