6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Redmi Note 9 Pro Max விலை ரூ.16,499 ஆகும்.
ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது
ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் புதன்கிழமையன்று ஃப்ளாஷ் சேலில் விற்பனைக்கு வந்தது. விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலே போன்களின் இருப்பு தீர்ந்துவிட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் அடுத்த வாரம் ஃபிளாஷ் விற்பனையில் மீண்டும் கிடைக்கும் என்று ஷாவ்மி தலைவர் மனும்குமார் ஜெயின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Redmi Note 9 Pro Max விலை ரூ.16,499 ஆகும். அதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.17,999-யாகாவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.19,999-யாகவும் உள்ளது. இந்த போன் அடுத்த வாரம் Amazon மற்றும் Mi.com-ல் விற்பனைக்கு வரும்.
Today's sale of #RedmiNote9ProMax went out of stock within mins. Thank you all.
— Manu Kumar Jain (@manukumarjain) May 27, 2020
Did not get a chance to buy today? Don't worry! Our amazing factory team is working very hard to bring more supply next week. Stay tuned! #Xiaomi ❤️ #RedmiNote #ILoveRedmiNote https://t.co/2jlWB6HpnH
டூயல்-சிம் ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் நிறுவனத்தின் MIUI 11 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயங்கும். இந்த போனில் 6.67 இன்ச் எஃப்.எச்.டி + டிஸ்ப்ளே உள்ளது. போனின் உள்ளே ஒரு ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட், 8 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 128 ஜிபி வரை யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜ் உள்ளது.
இந்த போனின் பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. முதன்மை கேமராவில் 64 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. மேலும்,8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. செல்பி எடுக்க 32 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
இணைப்பிற்காக, இந்த போனில் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், அகச்சிவப்பு (ஐஆர்), நாவிக், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளது. போனின் உள்ளே 5,020 எம்ஏஎச் பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது.
Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Neutrino Detectors May Unlock the Search for Light Dark Matter, Physicists Say
Uranus and Neptune May Be Rocky Worlds Not Ice Giants, New Research Shows
Steal OTT Release Date: When and Where to Watch Sophie Turner Starrer Movie Online?
Murder Report (2025): A Dark Korean Crime Thriller Now Streaming on Prime Video